Saturday, May 29, 2021

மூட்டுவலியைக் குறைத்து பக்கவாதத்தைத் தடுக்கும் ''வாயு முத்திரை''

 


செய்முறை


காற்றுத் தத்துவத்தைக் குறிக்கும் ஆட்காட்டி விரலை சுக்ர க்ரந்தி என அழைக்கப்படும் கட்டைவிரலின் அடிப்பாகத்தில் வைத்து, அக்னித் தத்துவத்தைக் குறிக்கும் கட்டை விரலை ஆட்காட்டி விரலின் மீது மென்மையாக வைக்கவும்.மற்ற விரல்களை ஒன்றாக்கி நேராக வைத்து உள்ளங்கையை மேல்நோக்கி வைக்கவும். 


சிறப்புகள்


வாயுவின் ஏற்ற இறக்கங்களால் உடலில் ஏற்படும் பிரச்சினைகளை வாயு முத்திரை தீர்க்கும். ஆட்காட்டி விரலின் நுனியால் சுக்ர க்ரந்தியை மென்மையாக அழுத்தும்போது உடலிலுள்ள வாயுத் தத்துவம் குறைக்கப்படுகிறது. இது வாயுத் தத்துவத்தின் மாறுபாட்டால் ஏற்படும் நோய்களை குணமாக்குகிறது.

தொடர்ச்சியான கொட்டாவி, நமைச்சல், மலப்புழை வழியே காற்று வெளியேறுதல் போன்ற பிரச்சினைகள் இந்த முத்திரையால் குறையும். பக்கவாதத்தை இந்த முத்திரை தடுக்கும்.


காலம்


மேற்சொன்ன பிரச்சினைகள் தீவிரமாக இருந்தால், 45 நிமிடங்கள் வாயு முத்திரையையும், 15 நிமிடங்கள் ப்ராணமுத்திரையையும் செய்யவேண்டும்.  அவ்வாறு செய்யும்போது இந்த பிரச்சினைகளிலிருந்து விடுபடலாம். இந்த முத்திரையின் விளைவை 12 முதல் 24 மணி நேரங்களில் உணரலாம்.


அதிதீவிரச் சூழ்நிலையில் இந்த முத்திரையை 15 முதல் 40 நிமிடங்கள் வரை தொடர்ந்து செய்து வந்தால் நோய்கள் மெதுவாக குணமானாலும் நிரந்தரமாக குணமாகும்.


பலன்கள்


வாயு முத்திரை மன ஒருமைப்பாட்டை அளிக்கும். அதனால் ப்ராணாயாமம் செய்வதற்கு முன்பாக இம்முத்திரையைச் சில நிமிடங்கள் செய்யலாம். இந்த முத்திரையால் ருமாட்டிஸம், ஆர்த்ரைட்டிஸ், விரல் மூட்டுகளில் வலி, வீக்கம், , போன்ற நோய்களைக் குணமாகும். பார்கின்சன் நோய்க்கும், பக்கவாதத்துக்கும் இம்முத்திரை சிறந்த மருந்து. மேலும் இது சியாடிகா, இடுப்பு வலி, கீழ்வாயு நோய் மற்றும் வாயுத் தத்துவத்தின் ஏற்ற இறக்கங்களால் உண்டாகும் பிற நோய்களையும் குணமாக்கும். நோய் தீவிரமாக இருந்தால் முத்திரையை அதிக நேரம் எடுத்து செய்யவும். இந்த முத்திரை முகவாதம் மற்றும் கழுத்து இறுக்கம் ஆகிய நோய்களுக்கும் சிறந்த நிவாரணம் அளிக்கும்.


மணிக்கட்டில் உள்ள வாதநாடி வாயுமுத்திரையால் கட்டுப்படுத்தப்படுகிறது. வாயுக்கோளாறு காரணமாக   கழுத்தில் வலி ஏற்பட்டால் வாயுமுத்திரையைச் சற்று நேரம் செய்து பின், மணிக்கட்டை வலது புறத்தில் இருந்து இடது புறமாக அசைக்கவும். அப்போது கடகடவென சத்தம் வரும். கட்டைவிரலினால் அந்த வாதநாடியை ( நரம்பை) அழுத்தி முன்பு போல மணிக்கட்டை அசைக்கவும். முன்பு கேட்ட ஒலி மீண்டும் கேட்காதவரை இவ்வாறு செய்யவும்.   உடனடியாக கழுத்துவலி நீங்கும்.


இடப்பக்கத்தில் பிடிப்பு ஏற்பட்டால் இடது மணிக்கட்டை கடிகார முள் திசையிலும், அதற்கு எதிரான திசையிலும் சுற்றவும். வலியோ, பிடிப்போ வலதுபுறத்தில் இருந்தால் வலது மணிக்கட்டை மேற்கூறியவாறு சுழற்றவும். வலி கழுத்தைச் சுற்றிலும் இருந்தால் இரண்டு மனிக்கட்டுகளையும் சுழற்றவும்.


வாயு முத்திரை, முழங்கால் வலிக்கு நல்ல நிவாரணம் அளிக்கும். விரைவான சிறந்த நிவாரணத்தைப் பெற வாயுமுத்திரையுடன் ப்ராணமுத்திரையைச் சேர்த்து செய்யவும். ப்ராணமுத்திரை நமது உடலில் ஆற்றல் அளவை அதிகரித்து உடல் ரீதியான சமனின்மையைச் சரி செய்கிறது. வாயுமுத்திரை சனி மேடு மற்றும் ரேகைகளினால் உண்டாகும் தீமைகளைப் போக்கும். 


எச்சரிக்கை

மேற்சொன்ன பிரச்சினைகள் தீரும்வரை மட்டுமே வாயுமுத்திரையைச் செய்யவேண்டும். அதற்குப் பின் கண்டிப்பாகச் செய்யக்கூடாது.


வாழ்க வையகம்,  வாழ்க பாரதம்,  வாழ்க தமிழகம்  


Thursday, May 27, 2021

நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தி கணையத்தைச் சிறப்பாக இயங்கவைக்கும் ''வருண முத்திரை''

 

வருண முத்திரை

செய்முறை

அக்னித் தத்துவத்தைக் குறிக்கும் கட்டைவிரலின் நுனியை நீர் தத்துவத்தைக் குறிக்கும் சுண்டு விரலால் தொடவும். மற்ற மூன்று விரல்களை ஒன்றாக வைத்து உள்ளங்கை மேல் நோக்கி இருக்குமாறு வைத்து அமர்ந்த நிலையில் இம்முத்திரையைச் செய்யவும்.


சிறப்புகள்

 அறிவியலின் படி நமது உடல் 80 சதவிகிதம் நீராலானது. நீர்ப் பற்றாக்குறையால் ஏற்படும் பிரச்சினைகளையும், எல்லா நோய்களையும், வருணமுத்திரை தீர்க்கும்.

காலம்

தேவையான பொழுது மட்டுமே வருண முத்திரையைச் செய்யவேண்டும். தேவைப்பட்டால் ஒரு நாளைக்கு 20 நிமிடங்கள் இம்முத்திரையைச் செய்யலாம்.

பலன்கள்

இந்த முத்திரையைத் தொடர்ந்து செய்வதனால் வறட்சியைத் தடுத்து உடலுக்கும், சருமத்துக்கும் பளபளப்பைத் தந்து உடலைக் குளிர்விக்கிறது. தோல் சுருக்கம் ஏற்படாமல் பாதுகாக்கும். நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தி கணையத்தைச் சிறப்பாக இயங்கவைக்கும்.


நீர்ப் பற்றாக்குறையால் உடலில் ஏற்படும் அனைத்து பிரச்சினைகளையும் இம்முத்திரைத் தீர்க்கும்.

தசைபிடிப்புகளினால் ஏற்படும் வலியையும் இது குறைக்கும். வருண முத்திரை இரத்தத்தைத் தூய்மையாக்கி இரத்த ஓட்டத்தைச் சீரடையச் செய்து தோல் நோய்கள் வராமல் தடுக்கும். கண்களில் ஏற்படும் எரிச்சல் உணர்வைத் தடுக்க இந்த முத்திரை உதவி செய்யும். வறட்டு இருமலுக்கு இது அருமருந்தாகும். தோல் அரிப்பையும் சரி செய்யும்.

இந்த இருவிரல்கலையும் வேறு ஒருவரின் கட்டைவிரலினால் தேய்த்து விடுவது வெயிலினால் ஏற்படும் மயக்கத்தைப் போக்கி அவரை உடனடியாக சுயநினைவுக்குக் கொண்டு வரும். வெயிலில்  நடந்து செல்லும்போது ஏற்படும்   தாகத்தை வருண முத்திரை தடுக்கிறது.



வாழ்க வையகம்,   வாழ்க பாரதம்,   வாழ்க தமிழகம்

Wednesday, May 26, 2021

பலவீனத்தை பலமாக மாற்றும் ''ப்ருத்வி முத்திரை''

 




ப்ருத்வி முத்திரை

செய்முறை

பூமி தத்துவத்தைக் குறிக்கும் மோதிர விரல் நுனியும், அக்னி தத்துவத்தைக் குறிக்கும் கட்டை விரலின் நுனியும் ஒன்றையொன்று மென்மையாகத் தொடுமாறு செய்யவும். அழுத்தம் கொடுக்க வேண்டாம். மற்ற விரல்களை  நேராக வைத்து உள்ளங்கை மேல் நோக்கி இருக்குமாறு அமர்ந்த நிலையில் செய்யவும். 

சிறப்புகள்

இம்முத்திரை உடலிலுள்ள பூமி தத்துவத்தை சம நிலையில் வைக்கிறது. இது உடலிலுள்ள பல பலவீனமான நரம்புகளை குணப்படுத்துகிறது. அக்னித் தத்துவத்தைக்குறிக்கும் கட்டை விரல் நுனியில் மின்காந்த அலைகள் தொடர்ந்து கடத்தப்பட்டுக் கொண்டே இருக்கும். 

யோகஶாஸ்த்தின் படி நமது புருவ மத்தியில்  ஒரு புள்ளி உள்ளது. அது தான் ''ஆக்ஞா சக்கரம்''. அதனால் நமது நடுவிரலால் ஒருவரது ஆக்ஞா சக்கரத்தின் மேல் குங்குமத்தை வைத்தால் அவர்களது ஆற்றல் ஒளிவிட்டு மின்னி அவர்களுக்கு நன்மை ஏற்படும்.

மனித உடல் எலும்புகள், சதை, தோல், மற்றும் நரம்புகளால் ஆனது. பூமித் தத்துவத்தின் குறியீடுகளாக உள்ள இவைகளைக் கட்டுப்படுத்துவது பூமித் தத்துவத்தைக் குறிக்கும் நடுவிரல் ஆகும். ஒலி, பார்வை, சுவை, முகர்தல், மற்றும் தொடு உணர்ச்சி, ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவதும் பூமித் தத்துவமே ஆகும்.இம்முத்திரை இவற்றைத் தூண்டி நல்ல முறையில் செயல்பட வைக்கிறது.

காலம்

வசதியான ஏதேனும் ஒரு ஆசனத்தில் அமர்ந்து இந்த முத்திரையைச் செய்யலாம். இதனை எந்த நேரத்திலும் செய்யலாம். இந்த முத்திரையை எங்கும்,  எத்தனை நேரத்துக்கு வேண்டுமானாலும் செய்யலாம். 

பலன்கள்

உடல் பலவீனமானவர்கள் இந்த முத்திரையைச் செய்தால் அவர்களது பலவீனம் பலமாக மாறும். இந்த முத்திரை ஒருவரது உயரத்திற்கும், உடல் பருமனுக்கும் தகுந்தவாறு எடையை அதிகரிக்க உதவும்.

சருமத்தின் பளபளப்பை இது அதிகரிக்கும். இது குறிப்பிடத்தக்க அளவு உடலுக்குச் சக்தியூட்டும். இந்த முத்திரையைத் தொடர்ந்து செய்துவந்தால் ஒருவரை மகிழ்ச்சியாகவும், அமைதியாகவும் வைத்திருக்கும். இந்த முத்திரையைச் செய்பவர் எப்போதும் சுறுசுறூப்பாக இருப்பார்.

உடலில் இரத்த ஓட்டம் இயல்பு நிலைக்கு மாறி ஆரோக்கியம் மேம்படும். இம்முத்திரை சாதகரின் உள்ளத்திலும் மாற்றத்தை ஏற்படுத்தும். இந்த முத்திரையைச் செய்பவர்கள் கீழ்த்தரமான வேலைகளில் ஈடுபடமாட்டார்கள். உண்மையுள்ளராகவும், சேவை மனப்பான்மை உள்ளவராகவும், பரந்த மனம் உடையவராகவும் இருப்பார்.

இந்த ப்ருத்வி முத்திரை நம் அனைவருக்கும் நல்ல துணையாக விளங்கி நமது ஆன்மீக முன்னேற்றத்துக்கு உதவும். இந்த முத்திரையால் உடல் தன்னைத் தானே தூய்மையாக வைத்துக்கொள்வதால் இம்முத்திரைச் செய்பவருக்கு மலச்சிக்கல் ஏற்படாது.  


வாழ்க வையகம்,   வாழ்க பாரதம்,  வாழ்க தமிழகம்



Sunday, May 23, 2021

எலும்புகளுக்கு வலு சேர்க்கும் ''ஆகாஷ முத்திரை''

 

ஆகாஷ முத்திரை

செய்முறை

இம்முத்திரை ஆகாஷ தத்துவத்தைக் குறிக்கும் நடுவிரலின் நுனியால் அக்னி தத்துவத்தைக் குறிக்கும் கட்டை விரலின் நுனியை மெதுவாக தொடுவதன் மூலம் செய்யப்படுகிறது. தொடுதல் மிகவும் மென்மையானதாக இருக்க வேண்டும். மற்ற விரல்களை நேராக வைக்கவேண்டும். உள்ளங்கையை மேல் நோக்கியும் நேராகவும் வைத்து இதனைச் செய்யவேண்டும். 

சிறப்புகள்

இந்த முத்திரையைச் செய்வதால் ஆகாஷத் தத்துவம் நமது உடலில் தூண்டப்படும். இது சரியில்லையென்றால் நமது உடல் வலுவிழந்து, எலும்புகள் வடிவமற்றதாகவும், நொறுங்கும் தன்மையுடையதாகவும் மாறும். இந்த முத்திரை நமது எலும்புகளை பலப்படுத்தும். இத்தத்துவம் நமது உடலில் குறைந்து காணப்பட்டால் ஒலி அலைகள் சரியாகப் ப்ரதிபலிக்காது. இதனால் காது கேளாத்தன்மை ஏற்படலாம். இந்தக் குறையை ஆகாஷ முத்திரையால் நாம் சரி செய்யலாம். 

நடுவிரல் நமது இதயத்தோடு தொடர்புடையது. அதனால் இந்த முத்திரையைத் தொடர்ந்து செய்துவந்தால் இதயம் வலுப்பெற்று திறம்பட செயல்படும். இந்த முத்திரை நமது எலும்புகளை வலுப்பெறச் செய்கிறது. இரத்தம் எலும்பு மஜ்ஜைகளிலிருந்து உருவாகிறது என்பதை நாம் அறிவோம். இம்முத்திரை இரத்தம் உருவாக உதவி செய்து நம்மை உடல்நலம் பெறச் செய்கிறது.

காலம் 

இந்த முத்திரையை தேவையான போது மட்டும் தான் செய்யவேண்டும். வேண்டிய பலனைப் பெற சரியான நேரத்தில் முறையாகச் செய்யபடவேண்டும். குறைந்தபட்சம் பதினைந்து நிமிடம் செய்யலாம். இத்துடன் ப்ராணாயாமமும்  செய்துவந்தால் இதயம் வலுப்பெறுவது நிச்சயம்


வாழ்க வையகம்,   வாழ்க பாரதம்,   வாழ்க தமிழகம்

Friday, May 21, 2021

மன அழுத்தம் நீக்கி அமைதியைத் தரும் ''சின் முத்திரை''

 

சின் முத்திரை

செய்முறை

அக்னி தத்துவத்தைக் குறிக்கும் கட்டைவிரலின்   நுனியை காற்றுத் தத்துவத்தைக் குறிக்கும் ஆள்காட்டி விரலின் நுனியால் லேசாகத் தொடவும். கடுமையாக அழுத்தக் கூடாது. மற்ற விரல்களை ஒன்றாகச் சேர்த்து நேராக நீட்டவும். இந்த முத்திரையை உள்ளங்கை மேல் நோக்கி இருக்குமாறு அமர்ந்த நிலையில் செய்யவேண்டும்.


சிறப்புகள்

இது மிகவும் முக்கியமான முத்திரையாகும்.  இது முத்திரையின் அரசன் என்றழைக்கப் படுகிறது. கடவுளே இந்த முத்திரையில் தான் அமர்ந்துள்ளார்.இந்த முத்திரை சாதகரின் உடலையும், மனதையும் ஆற்றலால் நிரப்பும். இந்த முத்திரையை ஒருவர் தான் விரும்பிய ஆசனத்தில் அமர்ந்து எந்த நேரத்திலும் செய்யலாம்.

இந்த முத்திரை மூளைக்கும், எண்ணற்ற நியூரான்களுக்கும் ( நரம்பு செல்கள்) ஆற்றலை அளித்து அவற்றைத் திறம்படச் செயலாற்ற வைக்கிறது. பத்மாசனத்தில் அமர்ந்து இரண்டு கைகளாலும் இந்த முத்திரையைச் செய்தால் ஒருவர் அதிகப் படியான பலனைப் பெறலாம்.

இந்த முத்திரையை நாம் பயணம், வேலை, ஓடுதல், அமர்ந்திருத்தல், படுத்து ஓய்வெடுத்தல் என எல்லாச் செயல்களின் போதும் செய்யலாம். இந்த முத்திரைக்கு கால, இட, சூழல் கட்டுப்பாடுகள் கிடையாது. இந்த முத்திரை ''சின் முத்திரை'' என அழைக்கப்படும்.

இந்த முத்திரையைத் தொடர்ந்து ஒருவர் செய்துவந்தால் கைரேகை ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ள ஆயுள்ரேகை மீதான தீய விளைவுகளை ஒருவர் விரட்டலாம். இது புதன் ரேகையை வலுப்படுத்தும். உருவாகி இராத வெள்ளிக் கோளுக்கான மையத்தையும் வலுவாக்கும்.

பலன்கள்

இந்த முத்திரை மூளையின் ஆற்றலை வலுவாக்குகிறது. மன இறுக்கத்தைக் குறைக்கிறது. இது மனச் சமனின்மையை நீக்கி அலைபாயும் மனம், மனப்பித்து, பைத்தியம், தலைவலி, கோபம், சோம்பல், முரட்டுத்தன்மை, மன அழுத்தம், அலுப்பு, மனோபயம், சந்தேகம், மற்றும் எதிலும் ஆர்வமின்மை ஆகியவற்றைச் சரி செய்கிறது. இம்முத்திரையால் நம் மனம் அமைதியடைந்து முகம் ப்ரகாசமாகி மனதின் ஆன்மீகப் பற்று அதிகரிக்கிறது. மூளையில் உள்ள நரம்புகள் வலுவடைந்து திறம் பெற்று, சுறுசுறுப்படைகின்றன.

இது மன அழுத்தத்தைக் குறைத்து ஒழுங்கற்ற வேகத்தையும், கோபத்தையும் கட்டுப்படுத்துகிறது. சின் முத்திரை மன ஒருமைப்பாட்டுக்குச் சிறந்த வழியாகும். இந்த முத்திரைச் செய்யும்போது கட்டைவிரல் மற்றும் ஆட்காட்டி விரல் நுனிகளில் துடிப்பை உணரலாம். நாம் அதன் மீது மனதை ஒருமுகப் படுத்தினால் விரல் நுனிகளில் ஒரு துடிப்பைத் துல்லியமாக உணரமுடியும். இதன் மூலம் அதிகபட்ச மன ஒருமைப் பாட்டை அடையமுடியும்.

இது மாணவர்களுக்கு ஒரு வரப்ரசாதம் ஆகும். இது அவர்களின் நினைவாற்றலையும், புத்திசக்தியையும் அதிகரிக்கிறது. சாதாரணமாக நாம் அனைவரும் சில சமயம் குறிப்பிடத்தக்க காரணமின்றி நம் கைகால்களை அசைக்கிறோம். இந்தத் தவறான பழக்கம் மூளையில் அழுத்தத்தை ஏற்படுத்தி பாதிப்பை உண்டாக்குகிறது. இது ஒருமுகத்தன்மையையும், நினைவாற்றலையும் குறைக்கிறது. இத்தகைய தேவையற்ற நடவடிக்கைகளை இந்த முத்திரை கட்டுப்படுத்துகிறது.

மூளை வளர்ச்சி குன்றிய குழந்தைகள் சின் முத்திரையைத் தொடர்ந்து செய்வதன் மூலம் அவர்களது மன ஆற்றல் அதிகரித்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அக்னி தத்துவத்தைக்குறிக்கும் கட்டைவிரல் மன ஆற்றலைத் தூண்டும் நரம்புமையமாக விளங்குகிறது. இந்த முத்திரையில் வாயு தத்துவத்தைக் குறிக்கும் ஆட்காட்டி விரல் மூலம் கட்டைவிரலின் நுனி அழுத்தப் படுகிறது. இந்தத் தொடுதல் கட்டை விரலின் நுனியிலுள்ள பிட்யூட்டரி, பீனியல் ஆகிய நாளமில்லாச் சுரப்பி மையங்களைத் தூண்டுகிறது.  அவை, இவ்வாறு வெளிப்பட்ட  அதிர்வுகளின் உதவியால் மூளையிலுள்ள  நரம்புமண்டலங்களைத் தூண்டுகின்றன. பிட்யூட்டாரி சுரப்பியில் ஏற்படும் சிறு மாற்றம் கூட குழந்தைகளை பாதித்து அவர்களை கோபம் கொண்டவர்களாக மாற்றுகிறது. இதனால் அவர்கள் பொய் சொல்லுதல், திருடுதல், மற்றும் சில கெட்ட பழக்கங்களுக்கு ஆளாகின்றனர்.இந்த முத்திரையைத் தொடர்ந்து செய்வதால் அத்தகைய குழந்தைகள் இந்தப் பழக்கத்திலிருந்து சீக்கிரமாக விடுபட்டு இயல்பு நிலைக்குத் திரும்ப முடியும். 

சின் முத்திரையைத் தொடர்ந்து செய்து வருவது நினைவாற்றலையும், சுய கற்றல் திறன்களையும் அதிகரித்து மூளையைத் தூண்டும். இவற்றையெல்லாம் தவிர, இந்த முத்திரை காலப்போக்கில் ஆன்மீக நோக்கத்தைப் பெற உதவி செய்து சாதகர்களைச் சாதனையின் உச்சிக்குக் கொண்டு செல்லும். தொடர்ச்சியாகவும், சிரத்தையுடனும் இந்த முத்திரையைச் செய்துவந்தால் மூன்றாவது கண் எனப்படும் மனக்கண் திறந்து யாரும் கண்டிராத இரு தெய்வீக ஆற்றல் சாதகரைச் சூழ்ந்து அவர் ஆறாம் அறிவை உணர்வார். ஒருவரது மூன்றாவது கண் திறந்து விட்டால், அவர் கடந்த கால, நிகழ்கால, மற்றும் எதிர்கால நிகழ்வுகலைக் காணும் ஆற்றலைப் பெறுவார். அத்தகைய நபர் பிறரது மனதை அறியும் ஆற்றலைப் பெறுவார். 

கடுமையான பிரச்சினைகளாலும் வாழ்வின் அழுத்தத்தினாலும் நமது மனச் சமநிலையை இழந்து உடல் மற்றும் மன நலன் பாதிக்கப்பட்டு, தூக்கமின்மை ஏற்படும். இந்த முத்திரையைத் தொடர்ந்து செய்துவந்தால் இத்தகைய நோய்கள் குணமாகும். மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட நபருக்கு இந்த சின் முத்திரை ஒரு தூக்க மாத்திரையைப் போல் செயல்படுகிறது. இது பரிசோதனைகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த முத்திரையோடு ''ப்ராமரி ப்ராணாயாமமும்'' மிகவும் உதவிகரமாக இருக்கும். 

ஆண்டுக்கனக்கில் தூக்கமின்மையால் பாதிக்கப்பட்டு, தூக்க மாத்திரைகள் சாப்பிட்டும், இயக்பு நிலைக்குத் திரும்பாதவர்கள் இந்த முத்திரையின் மூலம் நம்ப முடியாத நிவாரணத்தைப் பெற்றுள்ளனர். அவர்கள் நல்ல உறக்கத்தையும், அமைதியையும் அனுபவித்து அதனை மற்றவ்ர்களோடு பகிர்ந்தும் உள்ளனர். சின் முத்திரையின் பலன்களை சீக்கிரமாகப் பெற அத்தோடு சேர்த்து ப்ராண முத்திரையையும் செய்துவந்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்.


வாழ்க வையகம்,  வாழ்க பாரதம்,  வாழ்க தமிழகம்...

Thursday, May 20, 2021

TEN TYPES OF ''PRANA''

 


தச வாயுக்களும் அவற்றின் தொழில்களும்


 

  1. ப்ராணன்                  = உயிர்க்காற்று
  2. அபானன்                  = மலக்காற்று
  3. வ்யானன்                 = தொழில்காற்று
  4. உதானன்                 = ஒலிக்காற்று
  5. ஸமானன்                = நிரவுக்காற்று
  6. நாகன்                       = விழிக்காற்று
  7. கூர்மன்                    = இமைக்காற்று
  8. க்ருகரன்                  = தும்மல்காற்று
  9. தேவதத்தன்           = கொட்டாவிக்காற்று
  10. தனஞ்ஜயன்           = வீங்கல்காற்று

இவற்றுள் முதல் ஐந்தும் வாயுக்களான ப்ராணன், அபானன், வ்யானன், உதானன், ஸமானன் ஆகியவற்றை பிரதான வாயுக்கள் என்பார்கள். உடலின் பல முக்கியமான இயக்கங்களுக்குஇவையே காரணமாக உள்லன. இந்த பிரதான வாயுக்களுக்கு '' பஞ்ச பிராணன்'' என்று பெயர்.

பிற ஐந்து வாயுக்களான நாகன், கூர்மன், க்ருகரன், தேவதத்தன், தனஞ்ஜயன் ஆகியவற்றை துணை வாயுக்கள் என்பர். பிரதான வாயுக்கள் உயிர் வாழ மிக மிக முக்கியமானவை.துணை வாயுக்கள் தேவைதானெனினும் அவற்றில் ஏற்படும் மாற்றங்களால் உயிருக்கு ஊறு நேராது. துணை வாயுக்கள் ஒவ்வொன்றுக்கும் தனித் தனிப் பலன்கள் உள்ளன அவை மட்டுமே பாதிக்கப் படும்.







1. ப்ராணன் 


''ப்ராணா'' வேறு ப்ராணன் வேறு.ப்ராணா என்பது உயிர்ச்சக்தி.
ப்ராணன் உள்ளிட்ட பத்து வாயுக்களும் சேர்ந்து உருவாவதே ப்ராணா.எனவே இரணடையும் குழப்பிக் கொள்ளக்கூடாது. ப்ராணா எனும் உயிர்ச்சக்தியின் உட்பிரிவே ப்ராணன். ப்ராணன் இதயஸ்தானத்திலிருந்து மூக்கின் வழியாக மேல் நோக்கிச் சஞ்சரிக்கும். இதன் முக்கியமான பணிகள் இரண்டு.
  • பசி, தாகங்களை உருவாக்குதல்.
  • உண்ட உணவை செரிமானம் செய்தல்.


2 . அபானன்


குதம் (மலவாய்) குய்யம் ( கருவாய், பிறப்பு உறூப்பு) ஆகியவற்றைச் சுற்றி நின்று அவற்றீன் இயக்கங்களை கட்டுப் படுத்துவது அபானன்.இதன் முக்கியமான பணிகள் இரண்டு.

  • மலம், மூத்திரம் ஆகியவற்றை வெளியேற்றுதல்.
  • உடலுறவின் போது சுக்கிலம், சுரோணிதம் ஆகியவற்றைக் காப்பது, வெளிவரச் செய்வது அபானனின் வேலை.



3 . வ்யானன்


உடலின் அனைத்து பாகங்களிலும் ஸஞ்சரிப்பதால் இதை வ்யானன் என்கிறோம். (வியாபித்திருப்பவன்)  தொடு உணர்ச்சியை உணர்ந்துகொள்வது இந்த வியானனின் செயலே. உண்ட உனவு செரிமானபின் அதன் சத்தை உடலின் அனைத்து செல்களுக்கும் கொண்டு சேர்ப்பது வியானனின் மற்றொரு பணியாகும்.


4 . உதானன்


உதானனின் இருப்பிடம் தொண்டைப் பகுதியாகும். உமிழ் நீர், உணவு ஆகியவற்றை விழுங்கச் செய்வது உதானனே. குரல் நாண்களின் (vocal cords) இயக்கமும் உதானனின் செயலே. (பேச்சு, பாட்டு).

இது தவிர தூங்கும்போது நமது ஐம்புலன்களையும் தூங்கச் செய்வதும், விழித்த உடனே புலன்கள் ஐந்தையும் அதனதன் ஸ்தானத்தில் இயங்கச் செய்வதும் உதானனின் பயனாகும்.


5 . ஸமானன்


ஸமானனின் இருப்பிடம் நாபிஸ்தானம். பிற வாயுக்களின் சம் நிலையை சீராகப் பராமரிப்பது இந்த வாயுவின் வேலை. எனவே தான் இதனை ஸமானன் என்கிறோம்.

இது தவிர அன்ன சாரத்தை உடலிலுள்ள 72,000 நாடிகளுக்கும் அனுப்புவதும் சமானனின் மிக முக்கியமான பணி.

ஸமானன் உடலை வளர்க்கும் வாயுவாகும்.



6 . நாகன்


நமது கண்களுக்கு பார்வையைக் கொடுப்பது நாகனின் செயல்.
தொண்டையில் நின்று வாந்தியை உண்டுபண்ணும்.
முக்கல், சோம்பல், திமிறல், ஆகியவற்றுக்கும் காரணமாக அமைவது நாகனே.



7 . கூர்மன்


கண் இமைகளை இயக்கும் வாயு கூர்மன்.
கண்களைத் திறந்து மூடுதல், கண் இமைத்தல் ஆகியவை கூர்மவாயுவின் செயலாகும்.
மயிர்க்கூச்செரிதல், சிரிப்பு, முக லட்சணம் ஆகியவையும் கூர்மவாயுவின் முக்கிய பணியாகும்.



8 . க்ருகரன்


தும்மலை உருவாக்கும் வாயு க்ருகரன். வெளியில் இருந்து மூச்சினுள் நுழையும் தூசி, பாக்டீரியா, வைரஸ், போன்ற நோய்க்கிருமிகள் உடலினுள் நுழைந்து நோய்களை உருவாக்கி விடாமல் தடுப்பதே இந்த க்ருகர வாயுவின் முக்கியவேலை.

காற்றில் பரவும் நோய்களுக்கு உதாரணமாக காசநோய் எனப்படும் டி.பி இன்புளூயன்ஸா, ஆந்த்ராக்ஸ் போன்ற வைரஸ் நோய்களைக் கூறலாம்.இந்த நோய்களை உருவாக்கும் கிருமிகள் காற்றின் வழியே மூக்கினுள் நுழைந்து நுரையீரல்களை அடைந்து உடலில் நோய்களை உருவாக்குகின்றன. க்ருகரன் வாயு நல்லமுறையில் இயங்கினால் இத்தகைய கிருமிகள் மூக்கினுள் நுழைந்ததுமே தும்மலை உருவாக்கி அவற்றை வெளியேறச் செய்துவிடும். நோய்கள் வராது.


9 . தேவதத்தன்


கொட்டாவி விடுதல், விக்கல் ஆகிய இரண்டும் தேவதத்த வாயுவினால் உருவாக்கப் படுபவையே.

விஞ்ஞானரீதியாக ஆராய்ந்து பார்த்தால், மூளைக்குத் தேவையான அளவில் ப்ராணவாயு கிடைக்காதபோது தான் கொட்டாவி வருகிறது. கொட்டாவி விடும்போது தேங்கி நிற்கும் கரியமில வாயு ( கார்பன் டை ஆக்ஸைடு) வெளியேறுவது மட்டுமில்லாமல், அதிகப் படியான ப்ராணவாயு உள்ளே இழுக்கப் படுவதால் மூளைக்குத் தேவையான ப்ராணவாயு கிடைத்து மூளை மீண்டும் சுறு சுறுப்பாக இயங்கத் துவங்கும். சோர்வு அகலும்.

ரத்தத்தில் சர்க்கரையின் அளவு ( குளூக்கோஸ்) குறையும் போது மூலைக்குத் தேவையான குளூக்கோஸ் கிடைக்காது. இதனால் மூளை சோர்வடியும். உடலில் நீரின் அளவு குறையும் போதும் மூலை தனது முழுத்திறனோடு இயங்க முடியாது. இத்தகைய நிலைகளிலேயே விக்கல் உருவாகும். தேவையான தண்ணீரை அருந்தியவுடன் அல்லது உணவு உண்டவுடன் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு சரியாகும்போது விக்கல் நின்றுவிடும். ப்ராணவாயுவின் அளவு குறையும்போதும் விக்கல் உருவாகும். ஆகவே மூளையின் னலமான இயக்கத்தைப் பராமரிப்பதில் இந்த தேவதத்த வாயுவிற்கு மிக முக்கிய பங்கு உள்ளது.



10 . தனஞ்ஜயன்


உடலில் இருந்து உயிர் பிரியும்போது பிற ஒன்பது வாயுக்களும் வெளியேறிவிடும். ஆனால் இந்த தனஞ்ஜயன் வாயு மட்டுமே சுமார் மூன்று நாட்கள் வரை உடலிலேயே தங்கி நிற்கும்.

இறந்த உடலின் உள்லே பலவித வேதியியல் மாற்றங்களை நிகழ்த்தி உடலை வீங்கச் செய்வது இந்த தனஞ்ஜயனே. எனவே தான் இதனை ''வீங்கல்காற்று'' என்கிறோம்.

உடலை தஹனம் செய்யும்போது இந்தக் காற்று கபலத்தைப் பிலந்துகொண்டு வெளியேறும்.

உடலைப் புதைத்தால் மூன்றாம் நாளில் இது கபாலம் வழியே வெளியே சென்றுவிடும்.

இறப்பில் மட்டுமின்றி, பிறப்பிலும் தனஞ்ஜயன் வாயுவிற்கு மிக முக்கியமான ஒரு பங்கு உண்டு. கரு முழு வலர்ச்சி நிலையை அடந்தவுடன் தாயின் கருப்பை வாயைத் திறக்கச் செய்து கருவை வெளியே உந்தித் தள்ளுவதும் இந்த தனஞ்ஜயன வாயுவின் தலையாயப் பணியாகும். 

Friday, May 14, 2021

பஞ்சபூதங்களும் மூன்று தோஷங்களும்

 



ஆயுர்வேதம், சித்தமருத்துவம் போன்ற பாரம்பரிய முறைகளில் மனிதர்களை மூன்று வகையான உடற்கூறு (constitution) உடையவர்கள் என வகைப்படுத்துகின்றன

வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்றுமே அடிப்படை உடற்கூறுகள் அல்லது தோஷங்கள் என்றழைக்கப்படுகின்றன.தோஷம் என்ற வடமொழிச் சொல்லுக்கு நேரடியான அர்த்தம் ''குற்றம்'' அல்லது ''குறைபாடு'' என்பதே. ஒரு நபரின் அடிப்படை உடல்வாகு (தோஷம்) ''பித்தம்'' எனக் கூறும்போது அவருடைய உடலில் பித்தம் என்னும் குறைபாடு மிகுந்திருக்கும் என்பதே உண்மையான பொருளாகும். பித்தத்தினால் வரும் நோய்களே அவருக்கு மிகுதியாக இருக்கும்.

இந்த மூன்று தோஷங்களுமே பஞ்சபூதங்களின் சேர்க்கையால் தான் தோன்றுகின்றன. ஒவ்வொரு தோஷமும் இரண்டு பூதங்களின் (two elements) சேர்க்கையால் தான் உருவாகின்றன. அவற்றுள் ஒரு பூதத்தை அடிப்படையான பூதமென்றும், மற்றொன்றை துனை பூதம் என்றும் கூறுவார்கள்.

தோஷம்               அடிப்படை பூதம்                     துணைபூதம்

1) வாதம்               காற்று                                            ஆகாயம்

2) பித்தம்              நெருப்பு                                         நீர்

3)கபம்                    நீர்                                                     நிலம்

தோஷங்களினால் உருவாகும் நோய்களை சரிப்படுத்தவும் பஞ்சபூதங்களையே சமன்படுத்தவேண்டும். உதாரணமாக மூட்டுவலி, முதுகுப்பிடிப்பு, வாய்வுத் தொல்லை,, போன்ற நோய்கள் ''வாதம்'' எனும் வகையைச் சார்ந்தவை. இந்த நோய்களைக் குணப்படுத்த தனித்தனி முத்திரைகள் இருந்தாலும் முதலில் காற்று எனும் பூதத்தை ( வாதத்தின் அடிப்படை பூதம்) அல்லது ஆகாயம் எனும் துணை பூதத்தை சமன் செய்தால் மட்டுமே முழுமையான பலன் கிடைக்கும்.

அடிக்கடி சளி பிடித்தல், சைனஸ் எனும் பீனிஸ நோய் ஆஸ்துமா போன்றவை கபம் எனும் தோஷத்தால் உருவாகும் நோய்களாகும். இவற்றைக் குணப்படுத்த தனித்தனி முத்திரைகள் இருந்தாலும் இவற்றை சரி செய்யும் முன்னர் கபம் எனும் தோஷத்தை சரி செய்ய நீர் எனும் பூதத்தையும் நிலம் எனும் பூதத்தையும் சம்ன் செய்வது அவசியம்.



தொடரும்...

Thursday, May 13, 2021

மூச்சுத் திணறலைச் சரி செய்து நுரையீரலை வலுப்படுத்தும் ''லிங்க முத்திரை''

 





''லிங்க முத்திரை''

சிறப்புகள்

லிங்கமுத்திரையைச்செய்வதால் உடலின் வெப்ப நிலை அதிகரிக்கும். இம்முத்திரையைச் செய்பவர்கள் பழங்கள், மோர், எலுமிச்சைச் சாறு, அடங்கிய உயர்தர உணவுகளையும், நிறைய நீரையும் பருகவேண்டும். அப்போது தான் உடல் சமநிலை பெறும்.கடும் குளிரை விரட்டுவதற்காக குளிர்காலத்தில் இம்முத்திரையைச் செய்யலாம்.

செய்முறை

கட்டடை விரல்களைத் தவிர இரு கைகளிலுமுள்ள எட்டு விரல்களையும் குறுக்காகப் பிணைத்து வலது கட்டை விரலை நேராக வைத்து அதன் அடிப்பகுதியை இடது ஆட்காட்டி விரல் மற்றும் கட்டை விரலால் மென்மையாக அழுத்தவும்.

இதே போல் கட்டைவிரலை மாற்றிச் செய்யவும்.இந்த உருவம் சிவலிங்கத்தைப் போல் இருப்பதால் நமது முனிவர்களும், சித்தர்களும் இதனை ''லிங்க முத்திரை'' என்று அழைத்தனர்.

காலவரையறை

இந்த முத்திரையை நமக்கு வெப்பம் தேவைப்படும்போதும், மூச்சுத் திணறல் பியச்சினை உள்ளவர்கள்  மற்றும் உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் தினம் 5 அல்லது 10 நிமிடம் தொடர்ந்து செய்து வரலாம்.

பலன்கள்

அதிகக் குளிரின் போது லிங்க முத்திரை நமக்கு உதவும். கடுங்குளிரிலும் இந்த முத்திரை ஒருவரை வியர்க்கச் செய்யும். லிங்க முத்திரையைச் செய்வதால் உடல் வெப்பம் அதிகரிக்கும். நுரையீரலில் உள்ள கடுமையான சளி வெளியேறும். இருமல், சைனஸ் பிரச்சினை, மூச்சுத் திணறல், ஆகியவற்றை குணமாக்கும். உடலில் சேர்ந்துள்ள அதிகப் படியான கொழுப்பு எரிக்கப்படும்.

இம்முத்திரையில் எல்லா விரல்களும் பங்கேற்பதால் எல்லாத் தத்துவங்களும் தூண்டப்பட்டு தைராய்டு , பாராதைராய்டு, கல்லீரல், மற்றும் கணையச் சுரப்பிகளின் மீது அழுத்தம் ஏற்படுகிறது. இதனால் அவை திறம்படச் செய்ல்படும்.

இந்த முத்திரை தொண்டை மற்றும் கழுத்து வலிகளையும் குளிர் காலத்தில் வரும் நோய்களையும் குணப்படுத்த உதவும். நிமோனியா மற்றும் காச நோயின் தீவிரத்தைக் குறைக்கும்.

எச்சரிக்கை

இந்த முத்திரையை நீண்ட நேரத்திற்கோ ஒருவரது மன விருப்பப்படியோ செய்யக்கூடாது. குறிப்பாக வயிற்றுப்புண், தலைச்சுற்றல், மயக்கம், நெஞ்செரிச்சல், கல்லீரல் பிரச்சினை இருப்பவர்கள் தகுந்த யோகா குருவிடம் கலந்தாலோசிக்காமல் செய்யவே கூடாது.

SAMANA MUDRA சமான முத்திரை

சமான முத்திரை பஞ்சபூதங்களையும் உள்ளடக்கிய ஒரு முத்திரை இந்த சமான முத்திரை. நம் உடலில் உள்ள வாதம், பித்தம், கபம் எனும் முக்குற்றங்களையும், நீ...