சின் முத்திரை
செய்முறை
அக்னி தத்துவத்தைக் குறிக்கும் கட்டைவிரலின் நுனியை காற்றுத் தத்துவத்தைக் குறிக்கும் ஆள்காட்டி விரலின் நுனியால் லேசாகத் தொடவும். கடுமையாக அழுத்தக் கூடாது. மற்ற விரல்களை ஒன்றாகச் சேர்த்து நேராக நீட்டவும். இந்த முத்திரையை உள்ளங்கை மேல் நோக்கி இருக்குமாறு அமர்ந்த நிலையில் செய்யவேண்டும்.
சிறப்புகள்
இது மிகவும் முக்கியமான முத்திரையாகும். இது முத்திரையின் அரசன் என்றழைக்கப் படுகிறது. கடவுளே இந்த முத்திரையில் தான் அமர்ந்துள்ளார்.இந்த முத்திரை சாதகரின் உடலையும், மனதையும் ஆற்றலால் நிரப்பும். இந்த முத்திரையை ஒருவர் தான் விரும்பிய ஆசனத்தில் அமர்ந்து எந்த நேரத்திலும் செய்யலாம்.
இந்த முத்திரை மூளைக்கும், எண்ணற்ற நியூரான்களுக்கும் ( நரம்பு செல்கள்) ஆற்றலை அளித்து அவற்றைத் திறம்படச் செயலாற்ற வைக்கிறது. பத்மாசனத்தில் அமர்ந்து இரண்டு கைகளாலும் இந்த முத்திரையைச் செய்தால் ஒருவர் அதிகப் படியான பலனைப் பெறலாம்.
இந்த முத்திரையை நாம் பயணம், வேலை, ஓடுதல், அமர்ந்திருத்தல், படுத்து ஓய்வெடுத்தல் என எல்லாச் செயல்களின் போதும் செய்யலாம். இந்த முத்திரைக்கு கால, இட, சூழல் கட்டுப்பாடுகள் கிடையாது. இந்த முத்திரை ''சின் முத்திரை'' என அழைக்கப்படும்.
இந்த முத்திரையைத் தொடர்ந்து ஒருவர் செய்துவந்தால் கைரேகை ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ள ஆயுள்ரேகை மீதான தீய விளைவுகளை ஒருவர் விரட்டலாம். இது புதன் ரேகையை வலுப்படுத்தும். உருவாகி இராத வெள்ளிக் கோளுக்கான மையத்தையும் வலுவாக்கும்.
பலன்கள்
இந்த முத்திரை மூளையின் ஆற்றலை வலுவாக்குகிறது. மன இறுக்கத்தைக் குறைக்கிறது. இது மனச் சமனின்மையை நீக்கி அலைபாயும் மனம், மனப்பித்து, பைத்தியம், தலைவலி, கோபம், சோம்பல், முரட்டுத்தன்மை, மன அழுத்தம், அலுப்பு, மனோபயம், சந்தேகம், மற்றும் எதிலும் ஆர்வமின்மை ஆகியவற்றைச் சரி செய்கிறது. இம்முத்திரையால் நம் மனம் அமைதியடைந்து முகம் ப்ரகாசமாகி மனதின் ஆன்மீகப் பற்று அதிகரிக்கிறது. மூளையில் உள்ள நரம்புகள் வலுவடைந்து திறம் பெற்று, சுறுசுறுப்படைகின்றன.
இது மன அழுத்தத்தைக் குறைத்து ஒழுங்கற்ற வேகத்தையும், கோபத்தையும் கட்டுப்படுத்துகிறது. சின் முத்திரை மன ஒருமைப்பாட்டுக்குச் சிறந்த வழியாகும். இந்த முத்திரைச் செய்யும்போது கட்டைவிரல் மற்றும் ஆட்காட்டி விரல் நுனிகளில் துடிப்பை உணரலாம். நாம் அதன் மீது மனதை ஒருமுகப் படுத்தினால் விரல் நுனிகளில் ஒரு துடிப்பைத் துல்லியமாக உணரமுடியும். இதன் மூலம் அதிகபட்ச மன ஒருமைப் பாட்டை அடையமுடியும்.
இது மாணவர்களுக்கு ஒரு வரப்ரசாதம் ஆகும். இது அவர்களின் நினைவாற்றலையும், புத்திசக்தியையும் அதிகரிக்கிறது. சாதாரணமாக நாம் அனைவரும் சில சமயம் குறிப்பிடத்தக்க காரணமின்றி நம் கைகால்களை அசைக்கிறோம். இந்தத் தவறான பழக்கம் மூளையில் அழுத்தத்தை ஏற்படுத்தி பாதிப்பை உண்டாக்குகிறது. இது ஒருமுகத்தன்மையையும், நினைவாற்றலையும் குறைக்கிறது. இத்தகைய தேவையற்ற நடவடிக்கைகளை இந்த முத்திரை கட்டுப்படுத்துகிறது.
மூளை வளர்ச்சி குன்றிய குழந்தைகள் சின் முத்திரையைத் தொடர்ந்து செய்வதன் மூலம் அவர்களது மன ஆற்றல் அதிகரித்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அக்னி தத்துவத்தைக்குறிக்கும் கட்டைவிரல் மன ஆற்றலைத் தூண்டும் நரம்புமையமாக விளங்குகிறது. இந்த முத்திரையில் வாயு தத்துவத்தைக் குறிக்கும் ஆட்காட்டி விரல் மூலம் கட்டைவிரலின் நுனி அழுத்தப் படுகிறது. இந்தத் தொடுதல் கட்டை விரலின் நுனியிலுள்ள பிட்யூட்டரி, பீனியல் ஆகிய நாளமில்லாச் சுரப்பி மையங்களைத் தூண்டுகிறது. அவை, இவ்வாறு வெளிப்பட்ட அதிர்வுகளின் உதவியால் மூளையிலுள்ள நரம்புமண்டலங்களைத் தூண்டுகின்றன. பிட்யூட்டாரி சுரப்பியில் ஏற்படும் சிறு மாற்றம் கூட குழந்தைகளை பாதித்து அவர்களை கோபம் கொண்டவர்களாக மாற்றுகிறது. இதனால் அவர்கள் பொய் சொல்லுதல், திருடுதல், மற்றும் சில கெட்ட பழக்கங்களுக்கு ஆளாகின்றனர்.இந்த முத்திரையைத் தொடர்ந்து செய்வதால் அத்தகைய குழந்தைகள் இந்தப் பழக்கத்திலிருந்து சீக்கிரமாக விடுபட்டு இயல்பு நிலைக்குத் திரும்ப முடியும்.
சின் முத்திரையைத் தொடர்ந்து செய்து வருவது நினைவாற்றலையும், சுய கற்றல் திறன்களையும் அதிகரித்து மூளையைத் தூண்டும். இவற்றையெல்லாம் தவிர, இந்த முத்திரை காலப்போக்கில் ஆன்மீக நோக்கத்தைப் பெற உதவி செய்து சாதகர்களைச் சாதனையின் உச்சிக்குக் கொண்டு செல்லும். தொடர்ச்சியாகவும், சிரத்தையுடனும் இந்த முத்திரையைச் செய்துவந்தால் மூன்றாவது கண் எனப்படும் மனக்கண் திறந்து யாரும் கண்டிராத இரு தெய்வீக ஆற்றல் சாதகரைச் சூழ்ந்து அவர் ஆறாம் அறிவை உணர்வார். ஒருவரது மூன்றாவது கண் திறந்து விட்டால், அவர் கடந்த கால, நிகழ்கால, மற்றும் எதிர்கால நிகழ்வுகலைக் காணும் ஆற்றலைப் பெறுவார். அத்தகைய நபர் பிறரது மனதை அறியும் ஆற்றலைப் பெறுவார்.
கடுமையான பிரச்சினைகளாலும் வாழ்வின் அழுத்தத்தினாலும் நமது மனச் சமநிலையை இழந்து உடல் மற்றும் மன நலன் பாதிக்கப்பட்டு, தூக்கமின்மை ஏற்படும். இந்த முத்திரையைத் தொடர்ந்து செய்துவந்தால் இத்தகைய நோய்கள் குணமாகும். மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட நபருக்கு இந்த சின் முத்திரை ஒரு தூக்க மாத்திரையைப் போல் செயல்படுகிறது. இது பரிசோதனைகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த முத்திரையோடு ''ப்ராமரி ப்ராணாயாமமும்'' மிகவும் உதவிகரமாக இருக்கும்.
ஆண்டுக்கனக்கில் தூக்கமின்மையால் பாதிக்கப்பட்டு, தூக்க மாத்திரைகள் சாப்பிட்டும், இயக்பு நிலைக்குத் திரும்பாதவர்கள் இந்த முத்திரையின் மூலம் நம்ப முடியாத நிவாரணத்தைப் பெற்றுள்ளனர். அவர்கள் நல்ல உறக்கத்தையும், அமைதியையும் அனுபவித்து அதனை மற்றவ்ர்களோடு பகிர்ந்தும் உள்ளனர். சின் முத்திரையின் பலன்களை சீக்கிரமாகப் பெற அத்தோடு சேர்த்து ப்ராண முத்திரையையும் செய்துவந்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்.
வாழ்க வையகம், வாழ்க பாரதம், வாழ்க தமிழகம்...
No comments:
Post a Comment