ஆகாஷ முத்திரை
செய்முறை
இம்முத்திரை ஆகாஷ தத்துவத்தைக் குறிக்கும் நடுவிரலின் நுனியால் அக்னி தத்துவத்தைக் குறிக்கும் கட்டை விரலின் நுனியை மெதுவாக தொடுவதன் மூலம் செய்யப்படுகிறது. தொடுதல் மிகவும் மென்மையானதாக இருக்க வேண்டும். மற்ற விரல்களை நேராக வைக்கவேண்டும். உள்ளங்கையை மேல் நோக்கியும் நேராகவும் வைத்து இதனைச் செய்யவேண்டும்.
சிறப்புகள்
இந்த முத்திரையைச் செய்வதால் ஆகாஷத் தத்துவம் நமது உடலில் தூண்டப்படும். இது சரியில்லையென்றால் நமது உடல் வலுவிழந்து, எலும்புகள் வடிவமற்றதாகவும், நொறுங்கும் தன்மையுடையதாகவும் மாறும். இந்த முத்திரை நமது எலும்புகளை பலப்படுத்தும். இத்தத்துவம் நமது உடலில் குறைந்து காணப்பட்டால் ஒலி அலைகள் சரியாகப் ப்ரதிபலிக்காது. இதனால் காது கேளாத்தன்மை ஏற்படலாம். இந்தக் குறையை ஆகாஷ முத்திரையால் நாம் சரி செய்யலாம்.
நடுவிரல் நமது இதயத்தோடு தொடர்புடையது. அதனால் இந்த முத்திரையைத் தொடர்ந்து செய்துவந்தால் இதயம் வலுப்பெற்று திறம்பட செயல்படும். இந்த முத்திரை நமது எலும்புகளை வலுப்பெறச் செய்கிறது. இரத்தம் எலும்பு மஜ்ஜைகளிலிருந்து உருவாகிறது என்பதை நாம் அறிவோம். இம்முத்திரை இரத்தம் உருவாக உதவி செய்து நம்மை உடல்நலம் பெறச் செய்கிறது.
காலம்
இந்த முத்திரையை தேவையான போது மட்டும் தான் செய்யவேண்டும். வேண்டிய பலனைப் பெற சரியான நேரத்தில் முறையாகச் செய்யபடவேண்டும். குறைந்தபட்சம் பதினைந்து நிமிடம் செய்யலாம். இத்துடன் ப்ராணாயாமமும் செய்துவந்தால் இதயம் வலுப்பெறுவது நிச்சயம்
வாழ்க வையகம், வாழ்க பாரதம், வாழ்க தமிழகம்
No comments:
Post a Comment