Wednesday, May 26, 2021

பலவீனத்தை பலமாக மாற்றும் ''ப்ருத்வி முத்திரை''

 




ப்ருத்வி முத்திரை

செய்முறை

பூமி தத்துவத்தைக் குறிக்கும் மோதிர விரல் நுனியும், அக்னி தத்துவத்தைக் குறிக்கும் கட்டை விரலின் நுனியும் ஒன்றையொன்று மென்மையாகத் தொடுமாறு செய்யவும். அழுத்தம் கொடுக்க வேண்டாம். மற்ற விரல்களை  நேராக வைத்து உள்ளங்கை மேல் நோக்கி இருக்குமாறு அமர்ந்த நிலையில் செய்யவும். 

சிறப்புகள்

இம்முத்திரை உடலிலுள்ள பூமி தத்துவத்தை சம நிலையில் வைக்கிறது. இது உடலிலுள்ள பல பலவீனமான நரம்புகளை குணப்படுத்துகிறது. அக்னித் தத்துவத்தைக்குறிக்கும் கட்டை விரல் நுனியில் மின்காந்த அலைகள் தொடர்ந்து கடத்தப்பட்டுக் கொண்டே இருக்கும். 

யோகஶாஸ்த்தின் படி நமது புருவ மத்தியில்  ஒரு புள்ளி உள்ளது. அது தான் ''ஆக்ஞா சக்கரம்''. அதனால் நமது நடுவிரலால் ஒருவரது ஆக்ஞா சக்கரத்தின் மேல் குங்குமத்தை வைத்தால் அவர்களது ஆற்றல் ஒளிவிட்டு மின்னி அவர்களுக்கு நன்மை ஏற்படும்.

மனித உடல் எலும்புகள், சதை, தோல், மற்றும் நரம்புகளால் ஆனது. பூமித் தத்துவத்தின் குறியீடுகளாக உள்ள இவைகளைக் கட்டுப்படுத்துவது பூமித் தத்துவத்தைக் குறிக்கும் நடுவிரல் ஆகும். ஒலி, பார்வை, சுவை, முகர்தல், மற்றும் தொடு உணர்ச்சி, ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவதும் பூமித் தத்துவமே ஆகும்.இம்முத்திரை இவற்றைத் தூண்டி நல்ல முறையில் செயல்பட வைக்கிறது.

காலம்

வசதியான ஏதேனும் ஒரு ஆசனத்தில் அமர்ந்து இந்த முத்திரையைச் செய்யலாம். இதனை எந்த நேரத்திலும் செய்யலாம். இந்த முத்திரையை எங்கும்,  எத்தனை நேரத்துக்கு வேண்டுமானாலும் செய்யலாம். 

பலன்கள்

உடல் பலவீனமானவர்கள் இந்த முத்திரையைச் செய்தால் அவர்களது பலவீனம் பலமாக மாறும். இந்த முத்திரை ஒருவரது உயரத்திற்கும், உடல் பருமனுக்கும் தகுந்தவாறு எடையை அதிகரிக்க உதவும்.

சருமத்தின் பளபளப்பை இது அதிகரிக்கும். இது குறிப்பிடத்தக்க அளவு உடலுக்குச் சக்தியூட்டும். இந்த முத்திரையைத் தொடர்ந்து செய்துவந்தால் ஒருவரை மகிழ்ச்சியாகவும், அமைதியாகவும் வைத்திருக்கும். இந்த முத்திரையைச் செய்பவர் எப்போதும் சுறுசுறூப்பாக இருப்பார்.

உடலில் இரத்த ஓட்டம் இயல்பு நிலைக்கு மாறி ஆரோக்கியம் மேம்படும். இம்முத்திரை சாதகரின் உள்ளத்திலும் மாற்றத்தை ஏற்படுத்தும். இந்த முத்திரையைச் செய்பவர்கள் கீழ்த்தரமான வேலைகளில் ஈடுபடமாட்டார்கள். உண்மையுள்ளராகவும், சேவை மனப்பான்மை உள்ளவராகவும், பரந்த மனம் உடையவராகவும் இருப்பார்.

இந்த ப்ருத்வி முத்திரை நம் அனைவருக்கும் நல்ல துணையாக விளங்கி நமது ஆன்மீக முன்னேற்றத்துக்கு உதவும். இந்த முத்திரையால் உடல் தன்னைத் தானே தூய்மையாக வைத்துக்கொள்வதால் இம்முத்திரைச் செய்பவருக்கு மலச்சிக்கல் ஏற்படாது.  


வாழ்க வையகம்,   வாழ்க பாரதம்,  வாழ்க தமிழகம்



No comments:

Post a Comment

SAMANA MUDRA சமான முத்திரை

சமான முத்திரை பஞ்சபூதங்களையும் உள்ளடக்கிய ஒரு முத்திரை இந்த சமான முத்திரை. நம் உடலில் உள்ள வாதம், பித்தம், கபம் எனும் முக்குற்றங்களையும், நீ...