Thursday, May 27, 2021

நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தி கணையத்தைச் சிறப்பாக இயங்கவைக்கும் ''வருண முத்திரை''

 

வருண முத்திரை

செய்முறை

அக்னித் தத்துவத்தைக் குறிக்கும் கட்டைவிரலின் நுனியை நீர் தத்துவத்தைக் குறிக்கும் சுண்டு விரலால் தொடவும். மற்ற மூன்று விரல்களை ஒன்றாக வைத்து உள்ளங்கை மேல் நோக்கி இருக்குமாறு வைத்து அமர்ந்த நிலையில் இம்முத்திரையைச் செய்யவும்.


சிறப்புகள்

 அறிவியலின் படி நமது உடல் 80 சதவிகிதம் நீராலானது. நீர்ப் பற்றாக்குறையால் ஏற்படும் பிரச்சினைகளையும், எல்லா நோய்களையும், வருணமுத்திரை தீர்க்கும்.

காலம்

தேவையான பொழுது மட்டுமே வருண முத்திரையைச் செய்யவேண்டும். தேவைப்பட்டால் ஒரு நாளைக்கு 20 நிமிடங்கள் இம்முத்திரையைச் செய்யலாம்.

பலன்கள்

இந்த முத்திரையைத் தொடர்ந்து செய்வதனால் வறட்சியைத் தடுத்து உடலுக்கும், சருமத்துக்கும் பளபளப்பைத் தந்து உடலைக் குளிர்விக்கிறது. தோல் சுருக்கம் ஏற்படாமல் பாதுகாக்கும். நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தி கணையத்தைச் சிறப்பாக இயங்கவைக்கும்.


நீர்ப் பற்றாக்குறையால் உடலில் ஏற்படும் அனைத்து பிரச்சினைகளையும் இம்முத்திரைத் தீர்க்கும்.

தசைபிடிப்புகளினால் ஏற்படும் வலியையும் இது குறைக்கும். வருண முத்திரை இரத்தத்தைத் தூய்மையாக்கி இரத்த ஓட்டத்தைச் சீரடையச் செய்து தோல் நோய்கள் வராமல் தடுக்கும். கண்களில் ஏற்படும் எரிச்சல் உணர்வைத் தடுக்க இந்த முத்திரை உதவி செய்யும். வறட்டு இருமலுக்கு இது அருமருந்தாகும். தோல் அரிப்பையும் சரி செய்யும்.

இந்த இருவிரல்கலையும் வேறு ஒருவரின் கட்டைவிரலினால் தேய்த்து விடுவது வெயிலினால் ஏற்படும் மயக்கத்தைப் போக்கி அவரை உடனடியாக சுயநினைவுக்குக் கொண்டு வரும். வெயிலில்  நடந்து செல்லும்போது ஏற்படும்   தாகத்தை வருண முத்திரை தடுக்கிறது.



வாழ்க வையகம்,   வாழ்க பாரதம்,   வாழ்க தமிழகம்

No comments:

Post a Comment

SAMANA MUDRA சமான முத்திரை

சமான முத்திரை பஞ்சபூதங்களையும் உள்ளடக்கிய ஒரு முத்திரை இந்த சமான முத்திரை. நம் உடலில் உள்ள வாதம், பித்தம், கபம் எனும் முக்குற்றங்களையும், நீ...