Tuesday, January 4, 2022

பயத்தைப் போக்கி மனோதிடத்தை அளிக்கும் ''நாகமுத்திரை''







செய்முறை:-


விரிப்பில் சுகாஸனம் அல்லது ஸித்தாஸனம் இவற்றில் அமர்ந்து நிதானமாக மூன்று முறை சுவாசம். அதன் பின் வலது கையின் மேல் இடது கையை குறுக்காக வைத்து அக்னி தத்துவத்தை உணர்த்தும் வலது கையின் கட்டை விரலை இடது கையின் நான்கு விரல்களின் கீழ் பகுதியில் வைத்து இடது கை கட்டை விரலை வலது கட்டை விரல் மேல் இலேசாக அழுத்தவும். மார்பு பகுதிக்கு நேராக வைத்து இந்த முத்திரையை செய்யவேண்டும்.
இடது கை ஆட்காட்டி விரலின் அடியில் ஒரு துடிப்பை இபோது நீங்கள் உணரலாம். இதுவே நாகமுத்திரை.


பலன்கள்:-

  • கற்பனைத்திறன் வளரும்.
  • மனதை எளிதில் கட்டுப்படுத்தலாம்.
  • கோபம் குறையும்.
  • வெறுப்பு, காமம், பொறாமை போன்ற எதிர்மறை எண்ணங்களை நீக்கும்.
  • நேர்மறை எண்ணங்களை வளர்க்கும்.
  • பயம் நீங்கும்.
  • மனோதிடம் அதிகரிக்கும்.
  • மனச்சோர்வு நீங்கும்.
  • மனத்தெளிவு பிறக்கும்.
  • எதிலும் நாட்டமின்மை பிரச்சினை நீங்கும்.
  • கவனம் மேம்படும்.
  • அறிவுக் கூர்மை ஏற்படும்.
  • கண்களில் ஒருவித பிரகாசம் ஏற்படும்.
இந்த முத்திரையை தொடர்ந்து 48 நாட்கள் செய்து வந்தால் மேலே சொன்ன பலன்கள் கிடைக்கும்.

காலம்:-

தினமும் காலை மற்றும் மாலை 10 முதல் 15 நிமிடங்கள் வரை செய்யலாம்.
கீழே உட்கார முடியாதவர்கள் நாற்காலியில் அமர்ந்தும் செய்யலாம்.

குறிப்பு:-

ஒரு சிலருக்கு பெண்களைப் பார்த்தால் ஒருவித நடுக்கம், பயம், வயிற்றுப்புசம், அல்லது மாலை 6 மணிக்கு மேல் சில மனிதர்களுக்கு காரணமின்றி பயம் வரும். அப்படிப்பட்டவர்கள் இந்த நாகமுத்திரையை நம்பிக்கையுடன் செய்தால் பலன் கண்கூடாக உணரலாம்.

HARIPRASAD M.A
Dip.Yoga, YT&E
Yoga Therapist for Diabetes.

வாழ்க வையகம், வாழ்க பாரதம், வாழ்க தமிழகம்.

No comments:

Post a Comment

SAMANA MUDRA சமான முத்திரை

சமான முத்திரை பஞ்சபூதங்களையும் உள்ளடக்கிய ஒரு முத்திரை இந்த சமான முத்திரை. நம் உடலில் உள்ள வாதம், பித்தம், கபம் எனும் முக்குற்றங்களையும், நீ...