செய்முறை
காற்றுத் தத்துவத்தைக் குறிக்கும் ஆட்காட்டி விரலை சுக்ர க்ரந்தி என அழைக்கப்படும் கட்டைவிரலின் அடிப்பாகத்தில் வைத்து, அக்னித் தத்துவத்தைக் குறிக்கும் கட்டை விரலை ஆட்காட்டி விரலின் மீது மென்மையாக வைக்கவும்.மற்ற விரல்களை ஒன்றாக்கி நேராக வைத்து உள்ளங்கையை மேல்நோக்கி வைக்கவும்.
சிறப்புகள்
வாயுவின் ஏற்ற இறக்கங்களால் உடலில் ஏற்படும் பிரச்சினைகளை வாயு முத்திரை தீர்க்கும். ஆட்காட்டி விரலின் நுனியால் சுக்ர க்ரந்தியை மென்மையாக அழுத்தும்போது உடலிலுள்ள வாயுத் தத்துவம் குறைக்கப்படுகிறது. இது வாயுத் தத்துவத்தின் மாறுபாட்டால் ஏற்படும் நோய்களை குணமாக்குகிறது.
தொடர்ச்சியான கொட்டாவி, நமைச்சல், மலப்புழை வழியே காற்று வெளியேறுதல் போன்ற பிரச்சினைகள் இந்த முத்திரையால் குறையும். பக்கவாதத்தை இந்த முத்திரை தடுக்கும்.
காலம்
மேற்சொன்ன பிரச்சினைகள் தீவிரமாக இருந்தால், 45 நிமிடங்கள் வாயு முத்திரையையும், 15 நிமிடங்கள் ப்ராணமுத்திரையையும் செய்யவேண்டும். அவ்வாறு செய்யும்போது இந்த பிரச்சினைகளிலிருந்து விடுபடலாம். இந்த முத்திரையின் விளைவை 12 முதல் 24 மணி நேரங்களில் உணரலாம்.
அதிதீவிரச் சூழ்நிலையில் இந்த முத்திரையை 15 முதல் 40 நிமிடங்கள் வரை தொடர்ந்து செய்து வந்தால் நோய்கள் மெதுவாக குணமானாலும் நிரந்தரமாக குணமாகும்.
பலன்கள்
வாயு முத்திரை மன ஒருமைப்பாட்டை அளிக்கும். அதனால் ப்ராணாயாமம் செய்வதற்கு முன்பாக இம்முத்திரையைச் சில நிமிடங்கள் செய்யலாம். இந்த முத்திரையால் ருமாட்டிஸம், ஆர்த்ரைட்டிஸ், விரல் மூட்டுகளில் வலி, வீக்கம், , போன்ற நோய்களைக் குணமாகும். பார்கின்சன் நோய்க்கும், பக்கவாதத்துக்கும் இம்முத்திரை சிறந்த மருந்து. மேலும் இது சியாடிகா, இடுப்பு வலி, கீழ்வாயு நோய் மற்றும் வாயுத் தத்துவத்தின் ஏற்ற இறக்கங்களால் உண்டாகும் பிற நோய்களையும் குணமாக்கும். நோய் தீவிரமாக இருந்தால் முத்திரையை அதிக நேரம் எடுத்து செய்யவும். இந்த முத்திரை முகவாதம் மற்றும் கழுத்து இறுக்கம் ஆகிய நோய்களுக்கும் சிறந்த நிவாரணம் அளிக்கும்.
மணிக்கட்டில் உள்ள வாதநாடி வாயுமுத்திரையால் கட்டுப்படுத்தப்படுகிறது. வாயுக்கோளாறு காரணமாக கழுத்தில் வலி ஏற்பட்டால் வாயுமுத்திரையைச் சற்று நேரம் செய்து பின், மணிக்கட்டை வலது புறத்தில் இருந்து இடது புறமாக அசைக்கவும். அப்போது கடகடவென சத்தம் வரும். கட்டைவிரலினால் அந்த வாதநாடியை ( நரம்பை) அழுத்தி முன்பு போல மணிக்கட்டை அசைக்கவும். முன்பு கேட்ட ஒலி மீண்டும் கேட்காதவரை இவ்வாறு செய்யவும். உடனடியாக கழுத்துவலி நீங்கும்.
இடப்பக்கத்தில் பிடிப்பு ஏற்பட்டால் இடது மணிக்கட்டை கடிகார முள் திசையிலும், அதற்கு எதிரான திசையிலும் சுற்றவும். வலியோ, பிடிப்போ வலதுபுறத்தில் இருந்தால் வலது மணிக்கட்டை மேற்கூறியவாறு சுழற்றவும். வலி கழுத்தைச் சுற்றிலும் இருந்தால் இரண்டு மனிக்கட்டுகளையும் சுழற்றவும்.
வாயு முத்திரை, முழங்கால் வலிக்கு நல்ல நிவாரணம் அளிக்கும். விரைவான சிறந்த நிவாரணத்தைப் பெற வாயுமுத்திரையுடன் ப்ராணமுத்திரையைச் சேர்த்து செய்யவும். ப்ராணமுத்திரை நமது உடலில் ஆற்றல் அளவை அதிகரித்து உடல் ரீதியான சமனின்மையைச் சரி செய்கிறது. வாயுமுத்திரை சனி மேடு மற்றும் ரேகைகளினால் உண்டாகும் தீமைகளைப் போக்கும்.
எச்சரிக்கை
மேற்சொன்ன பிரச்சினைகள் தீரும்வரை மட்டுமே வாயுமுத்திரையைச் செய்யவேண்டும். அதற்குப் பின் கண்டிப்பாகச் செய்யக்கூடாது.
வாழ்க வையகம், வாழ்க பாரதம், வாழ்க தமிழகம்
No comments:
Post a Comment