- ப்ராணன் = உயிர்க்காற்று
- அபானன் = மலக்காற்று
- வ்யானன் = தொழில்காற்று
- உதானன் = ஒலிக்காற்று
- ஸமானன் = நிரவுக்காற்று
- நாகன் = விழிக்காற்று
- கூர்மன் = இமைக்காற்று
- க்ருகரன் = தும்மல்காற்று
- தேவதத்தன் = கொட்டாவிக்காற்று
- தனஞ்ஜயன் = வீங்கல்காற்று
பிற ஐந்து வாயுக்களான நாகன், கூர்மன், க்ருகரன், தேவதத்தன், தனஞ்ஜயன் ஆகியவற்றை துணை வாயுக்கள் என்பர். பிரதான வாயுக்கள் உயிர் வாழ மிக மிக முக்கியமானவை.துணை வாயுக்கள் தேவைதானெனினும் அவற்றில் ஏற்படும் மாற்றங்களால் உயிருக்கு ஊறு நேராது. துணை வாயுக்கள் ஒவ்வொன்றுக்கும் தனித் தனிப் பலன்கள் உள்ளன அவை மட்டுமே பாதிக்கப் படும்.
1. ப்ராணன்
''ப்ராணா'' வேறு ப்ராணன் வேறு.ப்ராணா என்பது உயிர்ச்சக்தி.
ப்ராணன் உள்ளிட்ட பத்து வாயுக்களும் சேர்ந்து உருவாவதே ப்ராணா.எனவே இரணடையும் குழப்பிக் கொள்ளக்கூடாது. ப்ராணா எனும் உயிர்ச்சக்தியின் உட்பிரிவே ப்ராணன். ப்ராணன் இதயஸ்தானத்திலிருந்து மூக்கின் வழியாக மேல் நோக்கிச் சஞ்சரிக்கும். இதன் முக்கியமான பணிகள் இரண்டு.
- பசி, தாகங்களை உருவாக்குதல்.
- உண்ட உணவை செரிமானம் செய்தல்.
2 . அபானன்
குதம் (மலவாய்) குய்யம் ( கருவாய், பிறப்பு உறூப்பு) ஆகியவற்றைச் சுற்றி நின்று அவற்றீன் இயக்கங்களை கட்டுப் படுத்துவது அபானன்.இதன் முக்கியமான பணிகள் இரண்டு.
- மலம், மூத்திரம் ஆகியவற்றை வெளியேற்றுதல்.
- உடலுறவின் போது சுக்கிலம், சுரோணிதம் ஆகியவற்றைக் காப்பது, வெளிவரச் செய்வது அபானனின் வேலை.
3 . வ்யானன்
உடலின் அனைத்து பாகங்களிலும் ஸஞ்சரிப்பதால் இதை வ்யானன் என்கிறோம். (வியாபித்திருப்பவன்) தொடு உணர்ச்சியை உணர்ந்துகொள்வது இந்த வியானனின் செயலே. உண்ட உனவு செரிமானபின் அதன் சத்தை உடலின் அனைத்து செல்களுக்கும் கொண்டு சேர்ப்பது வியானனின் மற்றொரு பணியாகும்.
4 . உதானன்
உதானனின் இருப்பிடம் தொண்டைப் பகுதியாகும். உமிழ் நீர், உணவு ஆகியவற்றை விழுங்கச் செய்வது உதானனே. குரல் நாண்களின் (vocal cords) இயக்கமும் உதானனின் செயலே. (பேச்சு, பாட்டு).
இது தவிர தூங்கும்போது நமது ஐம்புலன்களையும் தூங்கச் செய்வதும், விழித்த உடனே புலன்கள் ஐந்தையும் அதனதன் ஸ்தானத்தில் இயங்கச் செய்வதும் உதானனின் பயனாகும்.
5 . ஸமானன்
ஸமானனின் இருப்பிடம் நாபிஸ்தானம். பிற வாயுக்களின் சம் நிலையை சீராகப் பராமரிப்பது இந்த வாயுவின் வேலை. எனவே தான் இதனை ஸமானன் என்கிறோம்.
இது தவிர அன்ன சாரத்தை உடலிலுள்ள 72,000 நாடிகளுக்கும் அனுப்புவதும் சமானனின் மிக முக்கியமான பணி.
ஸமானன் உடலை வளர்க்கும் வாயுவாகும்.
6 . நாகன்
நமது கண்களுக்கு பார்வையைக் கொடுப்பது நாகனின் செயல்.
தொண்டையில் நின்று வாந்தியை உண்டுபண்ணும்.
முக்கல், சோம்பல், திமிறல், ஆகியவற்றுக்கும் காரணமாக அமைவது நாகனே.
7 . கூர்மன்
கண் இமைகளை இயக்கும் வாயு கூர்மன்.
கண்களைத் திறந்து மூடுதல், கண் இமைத்தல் ஆகியவை கூர்மவாயுவின் செயலாகும்.
மயிர்க்கூச்செரிதல், சிரிப்பு, முக லட்சணம் ஆகியவையும் கூர்மவாயுவின் முக்கிய பணியாகும்.
8 . க்ருகரன்
தும்மலை உருவாக்கும் வாயு க்ருகரன். வெளியில் இருந்து மூச்சினுள் நுழையும் தூசி, பாக்டீரியா, வைரஸ், போன்ற நோய்க்கிருமிகள் உடலினுள் நுழைந்து நோய்களை உருவாக்கி விடாமல் தடுப்பதே இந்த க்ருகர வாயுவின் முக்கியவேலை.
காற்றில் பரவும் நோய்களுக்கு உதாரணமாக காசநோய் எனப்படும் டி.பி இன்புளூயன்ஸா, ஆந்த்ராக்ஸ் போன்ற வைரஸ் நோய்களைக் கூறலாம்.இந்த நோய்களை உருவாக்கும் கிருமிகள் காற்றின் வழியே மூக்கினுள் நுழைந்து நுரையீரல்களை அடைந்து உடலில் நோய்களை உருவாக்குகின்றன. க்ருகரன் வாயு நல்லமுறையில் இயங்கினால் இத்தகைய கிருமிகள் மூக்கினுள் நுழைந்ததுமே தும்மலை உருவாக்கி அவற்றை வெளியேறச் செய்துவிடும். நோய்கள் வராது.
9 . தேவதத்தன்
கொட்டாவி விடுதல், விக்கல் ஆகிய இரண்டும் தேவதத்த வாயுவினால் உருவாக்கப் படுபவையே.
விஞ்ஞானரீதியாக ஆராய்ந்து பார்த்தால், மூளைக்குத் தேவையான அளவில் ப்ராணவாயு கிடைக்காதபோது தான் கொட்டாவி வருகிறது. கொட்டாவி விடும்போது தேங்கி நிற்கும் கரியமில வாயு ( கார்பன் டை ஆக்ஸைடு) வெளியேறுவது மட்டுமில்லாமல், அதிகப் படியான ப்ராணவாயு உள்ளே இழுக்கப் படுவதால் மூளைக்குத் தேவையான ப்ராணவாயு கிடைத்து மூளை மீண்டும் சுறு சுறுப்பாக இயங்கத் துவங்கும். சோர்வு அகலும்.
ரத்தத்தில் சர்க்கரையின் அளவு ( குளூக்கோஸ்) குறையும் போது மூலைக்குத் தேவையான குளூக்கோஸ் கிடைக்காது. இதனால் மூளை சோர்வடியும். உடலில் நீரின் அளவு குறையும் போதும் மூலை தனது முழுத்திறனோடு இயங்க முடியாது. இத்தகைய நிலைகளிலேயே விக்கல் உருவாகும். தேவையான தண்ணீரை அருந்தியவுடன் அல்லது உணவு உண்டவுடன் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு சரியாகும்போது விக்கல் நின்றுவிடும். ப்ராணவாயுவின் அளவு குறையும்போதும் விக்கல் உருவாகும். ஆகவே மூளையின் னலமான இயக்கத்தைப் பராமரிப்பதில் இந்த தேவதத்த வாயுவிற்கு மிக முக்கிய பங்கு உள்ளது.
10 . தனஞ்ஜயன்
உடலில் இருந்து உயிர் பிரியும்போது பிற ஒன்பது வாயுக்களும் வெளியேறிவிடும். ஆனால் இந்த தனஞ்ஜயன் வாயு மட்டுமே சுமார் மூன்று நாட்கள் வரை உடலிலேயே தங்கி நிற்கும்.
இறந்த உடலின் உள்லே பலவித வேதியியல் மாற்றங்களை நிகழ்த்தி உடலை வீங்கச் செய்வது இந்த தனஞ்ஜயனே. எனவே தான் இதனை ''வீங்கல்காற்று'' என்கிறோம்.
உடலை தஹனம் செய்யும்போது இந்தக் காற்று கபலத்தைப் பிலந்துகொண்டு வெளியேறும்.
உடலைப் புதைத்தால் மூன்றாம் நாளில் இது கபாலம் வழியே வெளியே சென்றுவிடும்.
இறப்பில் மட்டுமின்றி, பிறப்பிலும் தனஞ்ஜயன் வாயுவிற்கு மிக முக்கியமான ஒரு பங்கு உண்டு. கரு முழு வலர்ச்சி நிலையை அடந்தவுடன் தாயின் கருப்பை வாயைத் திறக்கச் செய்து கருவை வெளியே உந்தித் தள்ளுவதும் இந்த தனஞ்ஜயன வாயுவின் தலையாயப் பணியாகும்.
No comments:
Post a Comment