Friday, May 14, 2021

பஞ்சபூதங்களும் மூன்று தோஷங்களும்

 



ஆயுர்வேதம், சித்தமருத்துவம் போன்ற பாரம்பரிய முறைகளில் மனிதர்களை மூன்று வகையான உடற்கூறு (constitution) உடையவர்கள் என வகைப்படுத்துகின்றன

வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்றுமே அடிப்படை உடற்கூறுகள் அல்லது தோஷங்கள் என்றழைக்கப்படுகின்றன.தோஷம் என்ற வடமொழிச் சொல்லுக்கு நேரடியான அர்த்தம் ''குற்றம்'' அல்லது ''குறைபாடு'' என்பதே. ஒரு நபரின் அடிப்படை உடல்வாகு (தோஷம்) ''பித்தம்'' எனக் கூறும்போது அவருடைய உடலில் பித்தம் என்னும் குறைபாடு மிகுந்திருக்கும் என்பதே உண்மையான பொருளாகும். பித்தத்தினால் வரும் நோய்களே அவருக்கு மிகுதியாக இருக்கும்.

இந்த மூன்று தோஷங்களுமே பஞ்சபூதங்களின் சேர்க்கையால் தான் தோன்றுகின்றன. ஒவ்வொரு தோஷமும் இரண்டு பூதங்களின் (two elements) சேர்க்கையால் தான் உருவாகின்றன. அவற்றுள் ஒரு பூதத்தை அடிப்படையான பூதமென்றும், மற்றொன்றை துனை பூதம் என்றும் கூறுவார்கள்.

தோஷம்               அடிப்படை பூதம்                     துணைபூதம்

1) வாதம்               காற்று                                            ஆகாயம்

2) பித்தம்              நெருப்பு                                         நீர்

3)கபம்                    நீர்                                                     நிலம்

தோஷங்களினால் உருவாகும் நோய்களை சரிப்படுத்தவும் பஞ்சபூதங்களையே சமன்படுத்தவேண்டும். உதாரணமாக மூட்டுவலி, முதுகுப்பிடிப்பு, வாய்வுத் தொல்லை,, போன்ற நோய்கள் ''வாதம்'' எனும் வகையைச் சார்ந்தவை. இந்த நோய்களைக் குணப்படுத்த தனித்தனி முத்திரைகள் இருந்தாலும் முதலில் காற்று எனும் பூதத்தை ( வாதத்தின் அடிப்படை பூதம்) அல்லது ஆகாயம் எனும் துணை பூதத்தை சமன் செய்தால் மட்டுமே முழுமையான பலன் கிடைக்கும்.

அடிக்கடி சளி பிடித்தல், சைனஸ் எனும் பீனிஸ நோய் ஆஸ்துமா போன்றவை கபம் எனும் தோஷத்தால் உருவாகும் நோய்களாகும். இவற்றைக் குணப்படுத்த தனித்தனி முத்திரைகள் இருந்தாலும் இவற்றை சரி செய்யும் முன்னர் கபம் எனும் தோஷத்தை சரி செய்ய நீர் எனும் பூதத்தையும் நிலம் எனும் பூதத்தையும் சம்ன் செய்வது அவசியம்.



தொடரும்...

No comments:

Post a Comment

SAMANA MUDRA சமான முத்திரை

சமான முத்திரை பஞ்சபூதங்களையும் உள்ளடக்கிய ஒரு முத்திரை இந்த சமான முத்திரை. நம் உடலில் உள்ள வாதம், பித்தம், கபம் எனும் முக்குற்றங்களையும், நீ...