கட்டடை விரல்களைத் தவிர இரு கைகளிலுமுள்ள எட்டு விரல்களையும் குறுக்காகப் பிணைத்து வலது கட்டை விரலை நேராக வைத்து அதன் அடிப்பகுதியை இடது ஆட்காட்டி விரல் மற்றும் கட்டை விரலால் மென்மையாக அழுத்தவும்.
இதே போல் கட்டைவிரலை மாற்றிச் செய்யவும்.இந்த உருவம் சிவலிங்கத்தைப் போல் இருப்பதால் நமது முனிவர்களும், சித்தர்களும் இதனை ''லிங்க முத்திரை'' என்று அழைத்தனர்.
காலவரையறை
இந்த முத்திரையை நமக்கு வெப்பம் தேவைப்படும்போதும், மூச்சுத் திணறல் பியச்சினை உள்ளவர்கள் மற்றும் உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் தினம் 5 அல்லது 10 நிமிடம் தொடர்ந்து செய்து வரலாம்.
பலன்கள்
அதிகக் குளிரின் போது லிங்க முத்திரை நமக்கு உதவும். கடுங்குளிரிலும் இந்த முத்திரை ஒருவரை வியர்க்கச் செய்யும். லிங்க முத்திரையைச் செய்வதால் உடல் வெப்பம் அதிகரிக்கும். நுரையீரலில் உள்ள கடுமையான சளி வெளியேறும். இருமல், சைனஸ் பிரச்சினை, மூச்சுத் திணறல், ஆகியவற்றை குணமாக்கும். உடலில் சேர்ந்துள்ள அதிகப் படியான கொழுப்பு எரிக்கப்படும்.
இம்முத்திரையில் எல்லா விரல்களும் பங்கேற்பதால் எல்லாத் தத்துவங்களும் தூண்டப்பட்டு தைராய்டு , பாராதைராய்டு, கல்லீரல், மற்றும் கணையச் சுரப்பிகளின் மீது அழுத்தம் ஏற்படுகிறது. இதனால் அவை திறம்படச் செய்ல்படும்.
இந்த முத்திரை தொண்டை மற்றும் கழுத்து வலிகளையும் குளிர் காலத்தில் வரும் நோய்களையும் குணப்படுத்த உதவும். நிமோனியா மற்றும் காச நோயின் தீவிரத்தைக் குறைக்கும்.
எச்சரிக்கை
இந்த முத்திரையை நீண்ட நேரத்திற்கோ ஒருவரது மன விருப்பப்படியோ செய்யக்கூடாது. குறிப்பாக வயிற்றுப்புண், தலைச்சுற்றல், மயக்கம், நெஞ்செரிச்சல், கல்லீரல் பிரச்சினை இருப்பவர்கள் தகுந்த யோகா குருவிடம் கலந்தாலோசிக்காமல் செய்யவே கூடாது.
No comments:
Post a Comment