Five Elements and Yoga Mudra's
பஞ்சபூதங்களில் ஏற்படும் குறைபாடுகளை மருந்துகள் மூலமும், உணவுக் கட்டுப்பாடுகள் மூலமும் குணப்படுத்தும் வழிமுறைகள் ஆயுர்வேதத்திலும், சித்த மருத்துவத்திலும் உள்ளன. சீன மருத்துவத்தில் அக்குபங்க்சர், அல்லது அக்குபிரஷர் முறைகளில் பஞ்சபூதங்களை சமன் செய்கிறார்கள்.
ஆனால் இந்த சிகிச்சை முறைகளை அந்தந்த துறைகளில் தேர்ச்சி பெற்ற மருத்துவர்களால் மட்டுமே செய்யமுடியும். நமது உடலிள்ள பஞ்சபூதங்களை நாமே சரி செய்துகொள்ள நமது முன்னோர்கள் சில எளிய முத்திரைகளை நமக்குக் கண்டுபிடித்துத் தந்துள்ளனர். முத்திரைகளால் எப்படி பஞ்சபூதங்களை சமன் செய்யமுடியும்?
ஒரு கணிணியின் இயக்கங்களை ஒரு சிறிய மௌஸ் (Mouse) மூலமாகக் கட்டுப்படுத்திகிறோம். ஒரு தொலைக்காட்சிப் பெட்டியின் இயக்கங்களை தொலைவில் இருந்தே ஒரு ரிமோட் கன்ட்ரோல் மூலமாக செயல்படுத்த முடிகிறதல்லவா? அது போன்றே, நமது மூளை, தசவாயுக்கள், உள்ளுறுப்புகள், உயிர்ச்சக்தி, பஞ்சபூதங்கள் ஆகிய அனைத்தையுமே நமது கைவிரல்கள் என்னும் ''ரிமோட் கண்ட்ரோல்'' மூலமாக இயக்கவும், கட்டுப்படுத்தவும் முடியும்.
நம் விரல்களில் அப்படி என்ன தான் இருக்கிறது?
- அக்குபிரஷர் புள்ளிகள்.
- ரிப்லெக்ஸாலஜி புள்ளிகள், பாகங்கள்.
- சக்தி ஓட்டப்பாதைகள்.
- நரம்புகள்.
- ஆறு ஆதாரச் சக்கரங்கள்.
- நீர் = சிறு விரல் ( Littlefinger)
- நிலம் = மோதிர விரல் ( Ring finger)
- காற்று = சுட்டு விரல் ( Index finger)
- ஆகாயம் = நடுவிரல் ( Middle finger)
- நெருப்பு = பெரு விரல் ( Thumb finger)
நாள்பட்ட எந்த நோயாக இருந்தாலும் அந்த நோய்க்கான முத்திரையைச் செய்யும் முன்னர் பஞ்சபூத முத்திரைகள் மூலமாக முதலில் பஞ்சபூதங்களைச் சமன் செய்வது மிக மிக அவசியமான ஒன்றாகும்.பஞ்சபூதங்கள் சமநிலை அடந்தால் மட்டுமே நோய்களிலிருந்து முழுமையாக விடுதலை கிடைக்கும்.
நோய்கள் வரும் வரையில் காத்திராமல் பஞ்சபூத முத்திரைகளைத் தொடர்ந்து செய்து வந்தால் நோய்களே வராமல் காத்துக் கொள்ளலாம். நோய் வந்தபின் அவதிப்படுவதை விட வராமல் தடுத்துக் கொள்வதே அறிவார்ந்த செயல் அல்லவா?..மீண்டும் அடுத்த பதிவில் பார்க்கலாம் காத்திருங்கள்...
தொடரும்...
No comments:
Post a Comment