Tuesday, May 11, 2021

OXYGEN - ப்ராணவாயு

 

''ப்ராணவாயு''

கருவறை என்பது திருக்கோயிலில் இறைவன் எழுந்தருளி அருள்பாலிக்கும் அறையாகும். அதே போல்  ஒரு உயிர் தாயின் வயிற்றில் இருக்கும் கருவறை ஆகும். கருவறையில் முதல் மூச்சுடன் பயணமாகும் மனிதவாழ்க்கை கல்லறையில் கடைசி மூச்சுடன் முடிகிறது.

சுவாஸம் தான் உயிர் வாழ்க்கை. உணவின்றி எத்தனை நாளும் உயிர் வாழலாம். ஆனால், சுவாஸம் எனும் ''ப்ராணவாயு'' இல்லாமல் ஒரு சில நிமிடங்கள் கூட உயிர்வாழ முடியாது.மூச்சு மண்டல உறுப்புகள் இயங்க ''யோகா'' துணைபுரிகிறது. சுவாஸம் சம்பந்தமான நோய்கள் பெரும்பாலும் மூச்சுக்கிளைக் குழல்கள், நுரையீரல்கள். நுரையீரல் சிற்றறைகள், ஆகிய உறுப்புக்களின் கோளாறூகளினால் தான் ஏற்படுகின்றன.

நமது நுரையீரல்கள் மார்பின் இரு பக்கங்களிலும் எலும்புக்களின் உள்ளே மிகப் பாதுகாப்பாக வைக்கபட்டிருக்கின்றன. அதில் கணக்கற்ற துளைகள், தந்துதிகள் என்னும் வலைப்பின்னல்கள் உள்ளன. இது கடற்பஞ்சைப் போன்று இருக்கும். நம் மூக்கினால் இழுக்கப்படும் காற்று தொண்டைக்குள் இறங்கி குரல்வளையைக் கடந்து மூச்சுக்குழாய் வழியாகச் சென்று நுரையீரலை அடைகின்றது.

நம் உடலில் உள்ள கெட்ட இரத்தம் இருதயத்தை அடைந்து அங்கிருந்து சுத்தமடைவதற்காக இரு நுரையீரலுக்கும் பல சிறு இரத்தக்குழாய்களின் வழியாக அனுப்பப்படுகிறது. அங்குள்ள ப்ராணவாயுவினால் சுத்தம் செய்யப்பட்டு அதிலிலுள்ள கரியமில வாயு (CORBAN DYE OXIDE) விலகி மூச்சாக வெளியேறுகிறது. இதனால் தான் நாம் வெளியிடும் மூச்சு கரியமிலவாயுவாக உள்ளது. நாம் மூச்சை உள்ளே இழுக்கும்போது "ப்ரானவாயு'' உள்ளே சென்று சுத்தமான இரத்தம் மீண்டும் இருதயத்திற்குச் சென்று அங்கிருந்து பம்ப் செய்யப்பட்டு உடல் முழுவதும் பரவுகிறது.




இவ்வாறு செய்ய இரத்தம் சுத்தம் அடைய நுறையீரல்  சிறப்பாக இருக்கவேண்டும். நுறையீரல் நன்றாக இருந்தால்தான் மூச்சை உள்வங்கவும், பின் வெளி விடவும் முடியும். பல வேலைகளினால் நாம் முழுமையாக சுவாஸிக்காமல் இருப்பதால் நுரையீரலை ஆரோக்யமாக வைத்துக்கொள்வதில்லை.முறையாக  ப்ராணவாயுவை உட்கொள்ளாமலும் கரியமில வாயுவை வெளிவிடாமலும் இருந்தால் நம இரத்தம் சரியாகச் சுத்தம் அடையாது. ரஇரத்தம் சுத்தம் அடையாமல் மீண்டும் மீண்டும் இருதயத்திற்குச் சென்று உடல் முழுவதும் சென்றுகொண்டே இருக்கும். இதனால் நாளடைவில் சோர்வு, நரம்பு பலவீனம், மயக்கம், தலைவலி, ஆஸ்த்மா, என பலவகை  நோ  ய்கள் உண்டாகிறது. இதுவே நாளடைவில் பல பெரிய நோய்கள் உருவாகக் காரணாமாக அமைகிறது.

ப்ராணவாயுவுடன் (oxygen) உணவு எரிக்கப்படும்போது நிகழும் இரசாயன மாற்றத்தினால் கழிவுப் பொருளான கார்பன்-டை-ஆக்ஸடு உண்டாகிறது. ப்ராணாயாமம், நாடிசுத்தி, போன்ற யோகப்பயிற்சிகளின் மூலம் வெளியிலிருக்கும் ஆக்ஸிஜன் நிறைந்த காற்று நுரையீரலை நிரப்புகிறது. கார்பன்-டை-ஆக்ஸைடு நிறைந்த காற்று வெளியேறுகிறது. நுரையீரல் நிறைய மூச்சை உள்வாங்கினால் தான் நம் உடலினுள்ளே இருக்கும் ஜீவ-அக்னி நன்றாக எரியும். உடலுக்கு அனலும் சக்தியும் உடல் முழுவதும் உள்ள  உணவு அணுக்கள் ப்ராணவாயுவுடன் சேர்ந்து எரிக்கப்படுவதாலேயே கிடைக்கின்றன. ஒரு நாளைக்கு இருபத்து ஓராயிரத்து அறுநூறு (21,000) மூச்சுக்கள் நடைபெறுகின்றன. ஒரு மூச்சு என்பது ஒரு தடவை மூச்சை உள்ளே இழுத்து வெளியே விடுவதாகும்.


சொல்லுவேன் மானிடர்க்கு நாழி  யொன்றில் 
சுவாஸமது முந்நூற்றோ  டறுப தாகும்
வெல்லுவேனி ருபத்தோ ராயி ரந்தான் 
விளங்கி நிற்கும் சுவாஸமது அறுநூ றாகப்
புல்லுவேன்க லைமூன்று நாடிமூன்றால் 
புகழான மாத்திரையுஞ் செப்ப லாகும்
மல்லுவேன் நாடியது சரியா யோடில்  
மானிடருக்குப் பிணியுமது மேவி டாதே.

நாழிகை ஒன்றுக்கு 360 சுவாஸமாக நாளொன்றுக்கு 21,000 சுவாஸமும், இரேசக, கும்பக, பூரகமாம் நாடி மொன்றும், இடகலை, பிங்கலை, சுழுமுனையாகிய வாத, பித்த, சிலேத்துமம் என்பவகளே. இடகலை 14 அங்குல அளவு ஓடும்.  பிங்கலை நாடி 12 அங்குல அளவு ஓடும். சிலேத்தும நாடியின் மாத்திரை 1\2 அங்குலம். ப்ராணன் என்பது நமது உடலில் உள்ள உயிர்ப்புச் சக்தியாகும்.இது சுவாஸப்பையினை இயக்கி ஆள்கிறது. சீரான மூச்சுதான் ஒரு மனிதனை ஆரோக்கியப்படுத்துகிறது. ப்ராணனை அடக்கி ஆள்வதே ''ப்ராணாயாமம்''. ப்ராணாயாமம் எனும் பயிற்சியைத் தொடர்ந்து செய்துவந்தால் நுரையீரல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் அனைத்தும் தீரும்.   


தொடரும்...

No comments:

Post a Comment

SAMANA MUDRA சமான முத்திரை

சமான முத்திரை பஞ்சபூதங்களையும் உள்ளடக்கிய ஒரு முத்திரை இந்த சமான முத்திரை. நம் உடலில் உள்ள வாதம், பித்தம், கபம் எனும் முக்குற்றங்களையும், நீ...