Saturday, May 8, 2021

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து OXYGEN LEVELஐ அதிகரிக்கும் ''ப்ராண முத்திரை

 





''KING OF MUDRA''''ப்ராண முத்திரை''


சிறப்புகள்

ப்ராண முத்திரை ''முத்திரைகளின் அரசன்'' என்று கூடச் சொல்லலாம்.ப்ராணமுத்திரையைச் செய்வது ஒரு (DYNAMO)- மின்னியற்றியை இயக்குவதற்கு ஒப்பானதாகும். அது உடனடியாகச் செயல்பட்டு இயந்திரத்தை இயங்கவைக்கிறது. அது போல இம்முத்திரை மனித உடலிலுள்ள பல்வேறு ஆற்றல் மையங்களை தூண்டி ஆற்றலை உயிர்ச் சக்தியாக மாற்றுகிறது. இம்முத்திரையைச் செய்யும்போது நோயாளி மின்காந்த சக்தி (electro magnetic power) உயர்வதை உணரலாம். ப்ராண முத்திரையைத் தொடர்ந்து செய்து வரும்போது உடலும், உள்ளமும் வலிமையடையும். ஆண்களுக்கு வீர்யம் அதிகரிக்கும். ஆரோக்யம் மேம்படும். வீர்யக்குறைவே பல நோய்களுக்கு மூலகாரணமாக அமைகிறது.

ஜோதிடக் கலையின் படி மோதிரவிரல் சூரியனைக் குறிக்கும். நமது வீர்யத்துக்கும், உயிராற்றலுக்கும் சூரியனே காரணமாவார். புவியில் உயிர்கள் தோன்றவும், பிழைத்திருக்கவும் சூரியன்தான் காரணம்.

சுண்டுவிரல் புதனின் ஆற்றலைக் குறிக்கும். இந்த புதன் தான் உயிர்களுக்கு, குறிப்பாக குழந்தைப் பருவத்திலும், இளமைப் பருவத்திலும் ஆற்றலை அளிக்கும்  நீர்த்தத்துவத்தைக் குறிப்பதாகும்.இவ்வாறு நிலம், நீர், மற்றும் அக்கினித் தத்துவங்கள் ஒன்றினைந்து ஆற்றலின் ஊற்றுக்கண்ணாக விளங்குகின்றன. 

ப்ராணமுத்திரை இரத்த ஓட்டத்தைச் சீராக்கி தமனிகளிலும், சிரைகளிலும் உள்ள அடைப்புகளை நீக்குகிறது. இது நம் உயிராற்றலை அதிகரித்து நம்மைச் சோர்விலிருந்து காக்கிறது. இக்காரணத்துக்காகவே ப்ராணமுத்திரைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.இந்த முத்திரையைப் பயிற்சி செய்வதால் நமது கைரேகையிலிலுள்ள தவறுகள் சரிசெய்யப்பட்டு புதன் மற்றும் சூரிய ரேகைகள் வலுப்படும்.

வயது வரம்பின்றி குழந்தைகள் முதல் பெண்கள், முதியோர், நோய்வாய்ப்பட்டோர், அனைவரும் உட்கார்ந்துகொண்டோ, நடந்துகொண்டோ, படுத்துக்கொண்டோ, அல்லது வேறு ஏதேனும் செயலில் ஈடுபட்டுக் கொண்டோ இந்த முத்திரையைச் செய்யலாம். செய்யும் கால அளவுக்கேற்ப ஒருவர் பயனடையலாம்.


செய்முறை


படத்தில் உள்ளபடி சுண்டுவிரல் மற்றும் மோதிரவிரலை இணைத்து கட்டைவிரலின் நுனியைத் தொடவும். இம்மூன்று விரல்களும் முறையே நீர், நிலம், மற்றும் அக்னி தத்துவங்களைக் குறிக்கும். மற்ற இருவிரல்களையும் நேராக வைக்கவும். உள்ளங்கையை மேல்நோக்கி இருக்குமாறு வைத்து அமர்ந்த நிலையில் இதனைச் செய்யவும்.

பலன்கள்

ப்ராணமுத்திரை வீர்யத்தை அதிகரித்து அதனை உடலில் தங்கச் செய்கிறது. இதனால் மனித உடலின் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.

இந்த முத்திரையைச் செய்வதால் வைட்டமின்களின் பற்றாக்குறையால் ஏற்படும் நோய்கள் தீரும். பல்வேறு நோய்களைக் குணப்படுத்துவதோடு, இம்முத்திரை கண்களுக்கும் சக்தி அளிக்கும். இந்த முத்திரையை தினமும் 5லிருந்து 10 நிமிடம் வரையும், அதிகபட்சமாக மூன்றுவேளையும் 10 நிமிடம் எனக் கணக்கிட்டு 30 நிமிடம் வரை செய்யலாம். 

இம்முத்திரையால் பலவீனமானவர்களுக்கு உடல் பலமும், மனோபலமும் அதிகரிக்கும்.பலவீனமான தசைகள் பயனடைகின்றன. சோர்வடைந்திருக்கும் ஒருவரை ப்ராணமுத்திரை சக்தியுள்ளவராக்குகிறது. இந்தப் ப்ரானமுத்திரையுடன் க்ஞான முத்திரையும் சேர்த்து செய்தால் தூக்கமின்மை பிரச்சினை தீரும். ப்ராணமுத்திரையுடன் அபானவாயு முத்திரை செய்வதால் நீரழிவு  சர்க்கரைநோய் கட்டுப்படும்.

ப்ராணமுத்திரை கால்கள் மற்றும் பாதங்களில் ஏற்படும் வலிகளையும் போக்குகிறது. ஏதாவது ஒரு முத்திரையைச் செய்து முடித்த பின் இம்முத்திரை செய்தால் விரும்பிய பலனை விரைவாக அடையலாம்.

SSHARMA

No comments:

Post a Comment

SAMANA MUDRA சமான முத்திரை

சமான முத்திரை பஞ்சபூதங்களையும் உள்ளடக்கிய ஒரு முத்திரை இந்த சமான முத்திரை. நம் உடலில் உள்ள வாதம், பித்தம், கபம் எனும் முக்குற்றங்களையும், நீ...