Friday, May 7, 2021

நோய்களை நீக்கும்'' உயிர் சக்தி'' ''Life force''

 


  ''உயிர் சக்தி-LIFE FORCE''


  நமது உடலின் உள்ளே இருந்து உயிர் கொடுக்கும்,உடலை இயக்கும் சக்தியையே உயிர் சக்தி என்கிறோம். இந்த சக்தி நலமாக இருக்கும்போது உடலும் அதன் இயக்கங்களும் நலமாக இருக்கும். இந்த உயிர்சக்தியின் அளவில் அல்லது இயக்கங்களில் ஏற்படும் மாறுதல்களே நோய்கள் உருவாகக் காரணமாக அமைகின்றன. 

     உயிர் சக்தியின் இயக்கங்கள் முற்றிலுமாக நின்று போவதையே மரணம் எங்கிறோம். உயிர் சக்தி உடலை விட்டுப் பிரியும்போது ஆன்மாவும் உடலிலிருந்து வெளியேறிவிடும். பலர் உயிர்சக்தியும், ஆன்மாவும் ஒன்று என தவறாகப் புரிந்துகொள்கின்றனர். இரண்டும் வெவ்வேறானவை. ஆக, உடலின் இயக்கத்திற்கு மட்டுமின்றி ஆன்மாவின் இயக்கத்திற்கும் உயிர்சக்தி மிக மிக அவசியமாக உள்ளது.

உயிர் சக்தியின் பிற பெயர்கள்

இந்த உயிர் சக்தியை ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு கலாச்சாரத்திலும் வெவ்வேறு பெயர்களால் குறிக்கின்றனர்.உதாரணமாக,

  • ஆங்கிலேயர்கள் இந்த உயிர் சக்தியை வைட்டல் எனர்ஜி (vital energy) என்று அழைக்கிறார்கள்.
  • ஹோமியோபதி மருத்துவத்தின் தந்தை எனப் போற்றப்படும் டாக்டர் ஹானிமன் இந்த உயிர் சக்திக்கு சூட்டிய பெயர்: எலான் வைட்டேல் (Elan vitale).
  • ஐரோப்பாவில் பயோ மேக்னடிக் எனர்ஜி ( bio magnatic energy).
  • மெஸ்மரிஸத்தின் தந்தையான சஸ்புடீன் இந்த சக்தியை அனிமல் மேக்னட்டிஸம் ( animal magnatism) என்று குறிப்பிட்டார்.
  • உயிர் சக்தியை சோவியத்  நாட்டு விக்ஞானிகள் பயோ ப்லாஸ்மிக் எனர்ஜி ( bio plasmic energy) என்கிறார்கள்.
  • பண்டைய சீன மருத்துவ நூல்கள் இந்த சக்தியை ''ஷீ'' (Qi) or ( Chi) என்கின்றன.
நமது முன்னோர்கள் இந்த உயிர் சக்தியை ''ப்ராணா'' (Prana) என அழைக்கின்றனர்.



தொடரும்.

No comments:

Post a Comment

SAMANA MUDRA சமான முத்திரை

சமான முத்திரை பஞ்சபூதங்களையும் உள்ளடக்கிய ஒரு முத்திரை இந்த சமான முத்திரை. நம் உடலில் உள்ள வாதம், பித்தம், கபம் எனும் முக்குற்றங்களையும், நீ...