Wednesday, June 2, 2021

மலச்சிக்கலைப் போக்கும், மூல நோய் தீர்க்கும் ''அபான முத்திரை''.

 

''அபான முத்திரை''

செய்முறை

நிலத் தத்துவத்தைக் குறிக்கும் மோதிரவிரல் மற்றும் ஆகாயத் தத்துவத்துவத்தைக் குறிக்கும் நடுவிரல் நுனிகளை ஒன்றாகக் கொண்டுவந்து கட்டைவிரலின் நுனியை மென்மையாகத் தொடவும்.மற்ற இரு விரல்களை நேராகவும், தளர்வாகவும் வைக்கவும்.உள்ளங்கையை மேல்நோக்கி வைத்து அமர்ந்த நிலையில் இம்முத்திரையைச் செய்யவும். இது நில, ஆகாய, மற்றும் அக்னித் தத்துவங்களின் இணைப்பாகும்.

சிறப்புகள்

அபான முத்திரையில் நில, ஆகாய, மற்றும் அக்னித் தத்துவங்கள் இணைவதால் வயிற்றின் பாகங்களை நன்றாகச் செயல்பட வைத்து அவற்றின் திறம்பட்ட செயல்பாடுகளை உறுதி செய்கிறது.

ஜீரண மண்டலத்தின் முறையான செயல்பாட்டுக்கு இந்த முத்திரை மிகவும் முக்கியமானது. உடல், நோயின்றி இருக்க கழிவு நீக்க மண்டலம் சரிவரச் செயலாற்ற வேண்டும். அது போல கழிவு நீக்க மண்டலம் சரிவரச் செயலாற்ற, உடல் நோயின்றி இருக்க வேண்டும். அபான முத்திரை உடல் திறம்படச் செயலாற்றவும், தூய்மையாக வைத்துக்கொள்ளவும் உதவுகிறது.

யோகத்தில் உயர்ந்த நிலையை எட்ட, உடல் சிறந்த முறையில் செயலாற்றுவது அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஒரு சாதகர் உடலின் ஒவ்வோர் உறுப்பின் தூய்மைக்கும் முக்கியத்துவம் அளிக்கவேண்டும். யோகாசனத்தில் விந்யாஸங்களைச் செய்த பின்னரும் ஹடயோகத்தின் போதும் அபான முத்திரையைச் செய்வதால் இந்த நிலையை அடையலாம். 

ப்ராண முத்திரையையும், அபான முத்திரையையும், மிகச் சரியான முறையில் செய்வதே ஒரு வகை யோகமாகும். இந்த இரு முத்திரைகளையும் ஒரு சமநிலையோடு செய்து வருவது ஒருவருக்கு ஆன்மீக நிலையில் உயர்ந்த இடத்தை அடைய உதவும். தொடர்ச்சியான பயிற்சியின் மூலம் இச் சமநிலையை அடைய முடியும்.

பலன்கள்

நமது உடலில் ஒவ்வொரு நிமிடமும் சிறுநீர், மலம், வியர்வை, போன்ற எண்ணற்றக் கழிவுகள் உற்பத்தியாகின்றன. அபானமுத்திரை, இக்கழிவுகளை நீக்கி  உடலைத் தூய்மையாக்குகிறது. உடலைத் தூய்மை செய்வதோடல்லாமல் இம்முத்திரை மனதையும் தூய்மையாக்குகிறது. அபான முத்திரையால் மலச்சிக்கல் பிரச்சினை தீரும்.

மலச்சிக்கல் மூல நோய்க்கு வழிவகுத்து இரத்தக் கசிவுக்கும், இறுதியாக அறுவை சிகிச்சை மூலம் அகற்றவேண்டிய பௌத்திரத்துக்கும் காரணமாகும். இந்தப் பிரச்சினை அபான முத்திரையைத் தொடர்ந்து செய்வதால் தீரும். அதிக வியர்வையும், வியர்வை வெளியேறாமல் இருப்பதும் நோயை உருவாக்கும். இது நல்ல அறிகுறி அல்ல. அபானமுத்திரை இக்குறைபாட்டைச் சரிசெய்யும். 

அபானமுத்திரை சிறுநீரகங்களின் செயல்பாட்டில் நேரடி விளைவை ஏற்படுத்தும். சிறுநீரை வெளியேற்ற முடியாத ஒருவர் இந்த முத்திரையைச் செய்தால் எளிதில் சிறுநீர் வெளியேறும். மருத்துவசிகிச்சை மற்றும் ஊசி மருந்துக்கு பின்னரும் கூட சிறுநீரை வெளியேற்ற முடியாதோர் 45 நிமிடம் அபான முத்திரை பயிற்சிக்குப்பின்னர் எளிதில் சிறுநீர் வெளியேற்றிய நிறைய உதாரணங்கள் உள்ளன.

ப்ராஸ்டேட் சுரப்பி தொடர்பான பிரச்சினை அல்லது சிறுநீர் தொடர்பான பிரச்சினை உடைய ஒருவர் அபான முத்திரையால் குணமடைவது மருத்துவ உலகையே ஆச்சரியப்படுத்தி உள்ளது. வயிற்றில் அதிக வாயு உடைய ஒருவர் அபான முத்திரையை 45 நிமிடங்கள் தொடர்ந்து செய்துவந்தால் எளிதாகப் பிரச்சினை தீரும். அபான முத்திரை பற்களின் நலனையும் பராமரிக்கும். பல்வலி குறையும். 

இம்முத்திரை சர்க்கரைநோயைக் கட்டுப்படுத்த உதவும். காலை நேரத்தில்40-45 நிமிடங்கள் அபானமுத்திரையைச் செய்தால் சர்க்கரை அளவு இயல்பு நிலைக்குத் திரும்புவது கண்டறியப்பட்டுள்ளது. அபான முத்திரையுடன் ப்ராண முத்திரையைச் செய்வது பலன்தரக் கூடியது. கர்ப்பிணிகளின் சுகப்பிரசவத்திற்கு இம்முத்திரை உதவுகிறது. 

அபான முத்திரையைத் தொடர்ந்து செய்வதால் வாய், மூக்கு, மற்றும் கண் நோய்கள் குணமாகும். 


வாழ்க வையகம்,   வாழ்க பாரதம்,   வாழ்க தமிழகம்    

1 comment:

SAMANA MUDRA சமான முத்திரை

சமான முத்திரை பஞ்சபூதங்களையும் உள்ளடக்கிய ஒரு முத்திரை இந்த சமான முத்திரை. நம் உடலில் உள்ள வாதம், பித்தம், கபம் எனும் முக்குற்றங்களையும், நீ...