குபேர முத்திரை
செல்வத்தின் அதிபதியாகக் கருதப்படுபவர் குபேரன். அவரது பெயரால் இந்த முத்திரை அழைக்கப்படுகிறது.
செய்முறை
மோதிரவிரல் சுண்டுவிரல் ஆகிய இரண்டு விரல்களையும் மடக்கி கட்டை விரலின் அடிப்பாகத்தைத் தொடும்படி வைத்துக் கொள்ளவேண்டும். பிறகு கட்டைவிரல், ஆட்காட்டி விரல், நடுவிரல் ஆகியவற்றின் முனைகள் தொட்டுக்கொண்டிருக்கும் படி வைக்கவேண்டும்.
நவக்ரஹங்களில் கட்டை விரல் செவ்வாயையும், ஆட்காட்டி விரல் குருவையும், நடுவிரல் சனியையும் குறிக்கின்றன. செவ்வாய் வீரம் மற்றும் தைரியத்தை வழங்குகிறது. குரு செல்வத்தை வழங்குகிறது. சனி தீர்மானிக்கும் ஆற்றலை வழங்குகிறது. ஆக, குபேர முத்திரை நம் வாழ்விற்கான அனைத்தையும் வழங்குகிறது.
நமது விருப்பத்தை உறூதியாக மனதில் நினைத்தபடி குபேர முத்திரை செய்துவந்தால் அது நிச்சயம் நடக்கும். மாணவர்களுக்குத் தேர்வில் வெற்றி, தொழில் செய்பவர்களுக்கு தொழிலில் வெற்றி என்றூ அனைத்துவித வெற்றியைத் தருவது குபேர முத்திரையாகும்.
குபேர முத்திரையிலிருந்து வெளிப்படும் அதிர்வு அலைகள் வெளியிலிருந்து நமக்குத் தேவையான உதவியைப் பெற்றுத் தரும். மேலும் நமக்குள்ளேயும் வெற்றிக்கான ஆற்றலை உருவாக்கித் தரும்.
நேர்மறைச் சிந்தனையோடும், உறுதியான நம்பிக்கையோடும் இம்முத்திரையைச் செய்தால் நிச்சயம் பலனுண்டு. நமது குறிக்கோளை நிர்ணயித்துக் கொண்டு, நாம் அடைவது போல் காட்சிப் படுத்திக் கொண்டு, குபேர முத்திரையையும் பயிற்சி செய்துவந்தால் நாம் நிச்சயம் அடைவோம்.
இம்முத்திரை தலையின் முன்புறம் தேங்கியுள்ள சளியைக் கரைத்து வெளியேற்றும்.
காலம்
இம்முத்திரையை எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் செய்யலாம். எங்கு வேண்டுமானாலும் செய்யலாம். உட்காரும்போது, நடக்கும்போது, நிற்கும்போது, தூங்கும்போது என எப்படி வேண்டுமானாலும் செய்யலாம்.
வாழ்க வையகம், வாழ்க பாரதம், வாழ்க தமிழகம்