Monday, November 7, 2022

SAMANA MUDRA சமான முத்திரை




சமான முத்திரை


பஞ்சபூதங்களையும் உள்ளடக்கிய ஒரு முத்திரை இந்த சமான முத்திரை.
நம் உடலில் உள்ள வாதம், பித்தம், கபம் எனும் முக்குற்றங்களையும், நீர், நெருப்பு, நிலம், காற்று, ஆகாயம் எனும் பஞ்சபூதங்களையும், பிராணன், அபாநன், வியாநன், உதாநன், சமாநன் எனும் பஞ்ச பிராணன்களையும் நம் உடல்நிலைக்குத் தகுந்தவாறு சமமாக இயக்கி அனைத்து நோய்களையும் விரட்டக்கூடிய மிக அற்புதமான ஒரு முத்திரை தான் இந்த ''சமான முத்திரை''.

பஞ்சபூத சக்திகளைக் குறிக்கும் 5 விரல்களும் இங்கே சேர்கிறது. குவிகிறது. அதநால் நமக்கு சக்தி கிடைக்கிறது.பார்ப்பதற்கு மிக எளிமையான ஒன்றாக கூம்பு போல் காட்சி தருகிறது. நமது உடலில் எங்கே சக்தி தேவைப்படுகிறதோ அங்கே இந்த முத்திரையைக் கொண்டு தொட்டால் அல்லது இந்த முத்திரையால் லேசாக அழுத்தம் கொடுத்தால் குறிப்பிட்ட இடத்தில் உள்ள நோயை நீக்கும். இது அனுபவப் பூர்வமான உண்மை. 

முத்திரைகள் எவ்வாறு வேலை செய்கிறது

நமது உடல் 5 layer களால் ஆனது. அதாவது அன்னமய கோஷம், பிராணமய கோஷம், மனோமய கோஷம், விக்ஞாநமய கோஷம், ஆநந்தமய கோஷம் எனும் 5 விதமான உடலமைப்பு எல்லா மனிதர்களுக்கும் உள்ளது.  இன்று நாம் எடுத்துக் கொள்ளும் எல்லா மருந்து-மாத்திரைகளும், Xray-Scan முதலானவைகளும் Physical Body எனப்படும் அன்னமய கோஷத்தை மட்டுமே பிரதானமாகக் கொண்டவை. ஆனால் நாம் ஆசனங்கள், பிராணாயாமங்கள், முத்திரைகள் எல்லாமே Bliss Body எனப்படும் ஆனந்தமய கோஷத்தை நேரடியாக Activate செய்யும். அதனால் தான் யாராலும் குணப்படுத்த முடியாது எனச் சொல்லப்படும் நோய்கள் கூட யோக-முத்திரைகளால் குணமடையும். நம் கை விரல்கள் பிரபஞ்சத்தில் இருக்கக்கூடிய மின்காந்த சக்தியையும், பிராண சக்தியையும் கிரகிக்கக் கூடியவை. ஒவ்வொரு முத்திரையும் பல நோய்களைக் குணப்படுத்தும் தன்மை கொண்டது. முத்திரைகள் செய்வதால் நம் கை விரல்கள் மூலமாக பிராண சக்தியும், மின்காந்த சக்தியும் அதிகமாக இழுக்கப்பட்டு நம் ஒவ்வொரு நாடிகளிலும் சென்று அங்குள்ள கழிவுகளையும், அடைப்புகளையும் (Blockages -  wastages) நீக்கி ஒவ்வொரு செல் களுக்கும் தேவையான Oxygen - Nutrition ஐக் கொடுக்கிறது. இதனால் ஒவ்வொரு உறுப்பும் நோய் நீங்கி புத்துணர்ச்சி பெறுகிறது. 

எப்படி செய்வது ?

கீழே விரிப்பில் ஏதாவதொரு ஆசனத்தில் அமர்ந்து கொள்ளவும். கீழே உட்கார முடியாதவர்கள் நாற்காலியில் அமர்ந்தும் செய்யலாம். நமது கழுத்து முதுகுத் தண்டு தலை மூன்றும் நேராக இருக்கவேண்டும்.  கைகளில் சின்முத்திரை வைத்துக் கொண்டு கண்களை மூடி மெதுவாகவும் ஆழமாகவும் 3 முறை சுவாசிக்கவும். பிறகு நான்கு விரல்களும் கட்டை விரலின் நுனியுடன் சேர்த்து வைத்து கண்களை மூடிக் கொள்ளவும். இதுவே ''சமான முத்திரை''.


காலவரையறை

காலை மதியம் மாலை என நாள் ஒன்றுக்கு 3 முறை 15 நிமிடங்கள் வீதம் செய்யலாம். (45 Minutes)

நன்மைகள்

  • பஞ்சபூத சக்தியைச் சமன்படுத்துகிறது.
  • பஞ்ச பிராணன்களின் சஞ்சாரத்தை சமமாக வைக்கிறது.
  • வாதம்-பித்தம்-கபம் எனும் த்ரிதோஷங்களைக் கட்டுப்படுத்துகிறது.
  • மனதை அமைதிப் படுத்துகிறது.
  • சோர்வை நீக்கி புத்துணர்ச்சியைத் தருகிறது.
  • வலியுள்ள இடங்களில் வைத்தால் வலியை நீக்கும்.
  •  Energy Booster ஐப் போல செயல்படும்.



Heal Your Body - Feel Your Thoghts




SAMANA MUDRA சமான முத்திரை

சமான முத்திரை பஞ்சபூதங்களையும் உள்ளடக்கிய ஒரு முத்திரை இந்த சமான முத்திரை. நம் உடலில் உள்ள வாதம், பித்தம், கபம் எனும் முக்குற்றங்களையும், நீ...