Monday, January 10, 2022

சித்தர் நடைப்பயிற்சி எனும் சக்திவாய்ந்த ''8'' நடைப் பயிற்சி.

 




எட்டு நடை எப்படி நடக்க வேண்டும்?


படத்தில் உள்ளது போல எட்டினைத் தரையில் வரைந்து அதன் மீது நடக்கலாம். அகலம் 5 முதல் 6 அடி வரையிலும், நீளம் 10 முதல் 12 வரை இருக்கவேண்டும். மிகவும் அதிகமான நீளத்திலோ, அகலத்திலோ எட்டு போடக்கூடாது. முடியாதவர்கள் இரண்டு பூச்சட்டியை வைத்தும் நடந்து பழகலாம். 

எட்டினை வடக்கிலிருந்து தெற்காக அமைக்கலாம். கட்டாயமில்லை. இடவசதி அவ்வாறு இல்லாவிட்டால் பரவயில்லை. வேறுதிசை பார்த்தபடியும் நடக்கலாம். அதனால் தவறில்லை. நடக்கும்போது உடலை விரைப்பாக வைக்காமல் இலகுவாக வைத்தபடி நடக்கவேண்டும். குடும்பத்துடன் நடக்கும்போது ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் சேர்ந்து வரிசையாக நடக்கலாம். நடைப்பயிற்சி முடியும் வரை  மௌனமாகத்தான் இருக்க வேண்டும். பேசிக்கொண்டு நடக்கக்கூடாது. திறந்த வெளிகளில், மேல் மாடிகளில் நடக்கும்போது எங்கேயாவது, எதையாவது வேடிக்கை பார்த்தபடி நடக்கக் கூடாது. உங்கள் கவனம் உங்கள் உடல்நலத்திலும், நடைப்பயிற்சியிலும், உங்கள் சுவாசத்திலும் மட்டுமே இருக்கவேண்டும். 

மந்திரம் ஜபிக்கும் பழக்கமுள்ளவர்கள் மனதுக்குள்ளேயே ஜபித்தபடி எட்டு நடை போடலாம். முத்திரை தெரிந்தவர்கள் ப்ராணமுத்திரை செய்தபடி நடக்கலாம். அந்த்தந்த பலனுக்குண்டான முத்திரையையும் செய்தபடி நடக்கலாம்.  


எட்டு நடை போடுவதால் நம் உடலில் உள்ள முக்கியமான முதல் சக்கரமான ''மூலாதாரச் சக்கரம்'' தூண்டப்படும். மூலாதார முத்திரை எட்டு என்ற எண்ணிக்கையை பிரதிபலிப்பதை நீங்கள் படத்தில் காணலாம். 

முத்திரைகள் செய்யும் போது நாம் எப்படி தலை, கழுத்து, முதுகுத்தண்டு மூன்றையும் நேராக வைத்து செய்வோமோ அப்படியே எட்டு நடை போடும் போதும் இந்த மூன்றையும் நேராக வைத்துக் கொள்ளவேண்டும். 

நடக்கும் இடத்தை தேர்வு செய்வதில் கவனமாக இருக்கவேண்டும். வீட்டின் மேல்மாடியில் நடப்பது போதுமானது. வெளி இடங்களில் நடப்பதனால் மேடு பள்ளங்கள், சறுக்கல் இல்லாத இடமாக தர்வு செய்து நடக்கவேண்டும். அதே போல வண்டிகளின் சத்தங்கள், பலவித கேடு விளைவிக்கும் புகைகள், தொழிற்சாலைகளின் நச்சு வாயுக்கள், தூசு, புழுதிகள் அதிகமாக இல்லாத இடமாக இருக்கவேண்டும். 

காலை 5 முதல் 7:30 மணி வரையிலும், மாலை 5 முதல் 7:30 மணிவரையிலும் நடக்கலாம். தினசரி ஒரு குறிப்பிட்ட நேரத்தில் நடப்பது பலனை அதிகப்படுத்தும். 


கூடுதல் பலன் பெற கீழ்க்கண்டவற்றை பின்பற்றலாம். 

  • சிறு சிறு கூழாங்கற்கள் பதித்த 8 நடைபாதையில் நடப்பது.
  • தரையில் அக்குப்ரஷர் டைல்ஸ் பதித்து அதில் நடக்கலாம்.
  • அக்குப்ரஷர் காலணி அணிந்து நடக்கலாம்.
  • காலை, மாலை இருவேளைகளிலும் குறிப்பிட்ட நேரத்தில் நடப்பது.
பாதங்களிலும், உள்ளங்கைகளிலும் உடல் உறுப்புகளின் சுரப்பிகளுக்கான தூண்டும் புள்ளிகள் உள்ளன. அவற்றை முறைப்படி தூண்டுவது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். எட்டு நடப்பதால் பல நல்ல பலன்கள் நம்மைத் தேடிவரும். அதே சமயம், அந்த எட்டு நடை நடக்கும் பாதையில் வழவழப்பான சிறு சிறு கூழாங்கற்களை அமைத்து வெறும் கால்களுடன் நடந்தால் அதிக பலன்  கிடைக்கும். 

எட்டு நடைப்பயிற்சியால் குணமாகும் நோய்கள்:-
( முத்திரை சிகிச்சையுடன் இணைந்தது) 

  • தேவையற்ற கொழுப்புகள் கரைக்கப்பட்டு மாரடைப்பு உருவாவது தடுக்கப்படுகிறது.
  • மூட்டுவலி சீராகும். ( வாதமேரு முத்திரை)
  • மூக்கடைப்பு சரியாயாகும். (அக்னிமுத்திரை)
  • தலைவலி குணமாகும். (மஹாசீர்ஷ முத்திரை)
  • உடற்பருமன் குறையும். ( சூர்ய முத்திரை)
  • மார்புச்சளி, ஆஸ்த்மா நீங்கும். ( சுவாசகோச முத்திரை)
  • உடற்கழிவுகள் நீங்கும். ( அபான முத்திரை)
  • முதுகெலும்பு வலுவடையும். (மேரு முத்திரை)
  • உடலுக்கு தேவையான ப்ராணசக்தி கிடைக்கும்.
  • கண்பார்வை தெளிவடையும். ( ப்ராண முத்திரை)
  • மன இறுக்கம் மறையும். ( சின் முத்திரை)
  • இரத்த அழுத்தம் கட்டுக்குள் வரும். ( ரக்தபோத முத்திரை)
  • பாதவலி, கால்வலி குறையும்.
  • மன ஒருமைப்பாடு கிடைக்கும். (சின்மய முத்திரை)
  • சர்க்கரை நோய் குணமாகும். ( வருண & மூத்ராஷய முத்திரை)
  • தூக்கமின்மை சரியாகும். (வ்யான முத்திரை)
  • வயிறு உப்புசம் நீங்கும். ( சமான முத்திரை & அபான முத்திரை)
  • தைராய்டு பிரச்சினை சரியாகும். ( சங்கு முத்திரை & சூர்ய முத்திரை)
  • மாதவிடாய் பிரச்சினை தீரும். ( யோனி முத்திரை & ப்ராண முத்திரை)
  • முதுகுத் தண்டு ஜவ்வு பிதுங்குதல் சரியாகும்.

HARIPRASAD M.A Dip,Yoga, YT&E
Yoga Therapist for Diabetes, Mudra Therapist


வாழ்க வையகம்,   வாழ்க பாரதம்,    வாழ்க தமிழகம்

Tuesday, January 4, 2022

பயத்தைப் போக்கி மனோதிடத்தை அளிக்கும் ''நாகமுத்திரை''







செய்முறை:-


விரிப்பில் சுகாஸனம் அல்லது ஸித்தாஸனம் இவற்றில் அமர்ந்து நிதானமாக மூன்று முறை சுவாசம். அதன் பின் வலது கையின் மேல் இடது கையை குறுக்காக வைத்து அக்னி தத்துவத்தை உணர்த்தும் வலது கையின் கட்டை விரலை இடது கையின் நான்கு விரல்களின் கீழ் பகுதியில் வைத்து இடது கை கட்டை விரலை வலது கட்டை விரல் மேல் இலேசாக அழுத்தவும். மார்பு பகுதிக்கு நேராக வைத்து இந்த முத்திரையை செய்யவேண்டும்.
இடது கை ஆட்காட்டி விரலின் அடியில் ஒரு துடிப்பை இபோது நீங்கள் உணரலாம். இதுவே நாகமுத்திரை.


பலன்கள்:-

  • கற்பனைத்திறன் வளரும்.
  • மனதை எளிதில் கட்டுப்படுத்தலாம்.
  • கோபம் குறையும்.
  • வெறுப்பு, காமம், பொறாமை போன்ற எதிர்மறை எண்ணங்களை நீக்கும்.
  • நேர்மறை எண்ணங்களை வளர்க்கும்.
  • பயம் நீங்கும்.
  • மனோதிடம் அதிகரிக்கும்.
  • மனச்சோர்வு நீங்கும்.
  • மனத்தெளிவு பிறக்கும்.
  • எதிலும் நாட்டமின்மை பிரச்சினை நீங்கும்.
  • கவனம் மேம்படும்.
  • அறிவுக் கூர்மை ஏற்படும்.
  • கண்களில் ஒருவித பிரகாசம் ஏற்படும்.
இந்த முத்திரையை தொடர்ந்து 48 நாட்கள் செய்து வந்தால் மேலே சொன்ன பலன்கள் கிடைக்கும்.

காலம்:-

தினமும் காலை மற்றும் மாலை 10 முதல் 15 நிமிடங்கள் வரை செய்யலாம்.
கீழே உட்கார முடியாதவர்கள் நாற்காலியில் அமர்ந்தும் செய்யலாம்.

குறிப்பு:-

ஒரு சிலருக்கு பெண்களைப் பார்த்தால் ஒருவித நடுக்கம், பயம், வயிற்றுப்புசம், அல்லது மாலை 6 மணிக்கு மேல் சில மனிதர்களுக்கு காரணமின்றி பயம் வரும். அப்படிப்பட்டவர்கள் இந்த நாகமுத்திரையை நம்பிக்கையுடன் செய்தால் பலன் கண்கூடாக உணரலாம்.

HARIPRASAD M.A
Dip.Yoga, YT&E
Yoga Therapist for Diabetes.

வாழ்க வையகம், வாழ்க பாரதம், வாழ்க தமிழகம்.

SAMANA MUDRA சமான முத்திரை

சமான முத்திரை பஞ்சபூதங்களையும் உள்ளடக்கிய ஒரு முத்திரை இந்த சமான முத்திரை. நம் உடலில் உள்ள வாதம், பித்தம், கபம் எனும் முக்குற்றங்களையும், நீ...